உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இந்தி எதிர்ப்பு ஏன்?


தவறிய ஒரு வணிகன் மாதவி இல்லத்துக்குச் சென்றான். இங்கு வழிதவறிய கோவலர்கள் இல்லை; வழிதவற வேண்டுமென்று நினைக்கின்றவர்களும், நீ கட்டிய மனைவி அழகாகத்தானிருக்கின்றாள்; நான் கொண்டுவருபவள் குணத்திலேயும் குடிகேடி; பார்ப்பதற்கு அருவருப்பாகத்தானிருப்பாள், இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் அந்த கட்டழகியோடு நீ இருப்பது? அவளைப் பின் அறையிலே தள்ளிவிடு; இவளை நீ முன்கட்டிலே வைத்துக் கொள் என்று கேட்கிறார்கள் என்றால், நாம் கூடச் சும்மாயிருக்கலாம், இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் ஆர்த்தெழ வேண்டும்.

“தமிழ் மொழிக்கு வந்துற்ற இழுக்கைத் தடுப்பதற்கு – போக்குவதற்கு 1937-ல் தமிழர் பெரும்படை கிளம்பிய நேரத்தில் தாய்மார்கள்தான் அதற்கேற்ற உறுதுணையாக இருந்தார்கள். காலையிலே ஒரு வரலாற்று உண்மையை அருணகிரி அடிகள் எடுத்துச் சொன்னார். பெரியாருக்குப் ‘பெரியார்’ என்ற சிறப்பு பட்டப் பெயரை அளித்தவர்களே தாய்மார்கள்தான் என்பதை எடுத்துச் சொன்னார்கள்.”

அந்த நாட்களையெல்லாம் எண்ணிப்பார்த்தால்............’ அந்த நாட்களிலே இந்தியை ஒழித்துவிட்டோம் என்று நாங்களெல்லாம் இறுமாந்து இருந்தோம்; 20 ஆண்டுக் காலத்துக்குப்பிறகு, மறுபடியும் அந்த இந்தி ஆதிக்கப் பயம் நாட்டு மக்கள் உள்ளத்திலே புகுத்தப்படும் – மறுபடியும் இந்தியை எதிர்க்க வேண்டிய கட்டம் பிறக்கும் – மறுபடியும் அந்தப் பழைய சம்பவங்களெல்லாம் நடந்து தீர வேண்டும் – மறுபடியும் நானும் அருணகிரி அடிகளும் சிறைச்சாலைக்குச் செல்லவேண்டும் – மறுபடியும் தமிழகத்திலே பல்லாயிரக்கணக்கானவர்கள் அறப் போரிலே ஈடுபட வேண்டும் – என்று நாங்கள் அந்த நாட்களிலே எண்ணியதில்லை. ஏனென்றால், அன்றையத் தினம் போரைத் துவக்கிய நேரத்தில், எங்களை எதிர்த்தவரை விட இன்றையத்தினம் எங்களை எதிர்க்கக்