அறிஞர் அண்ணா
15
“கி . ஆ. பெ. விசுவநாதம் – தமிழ்ப் பேரவைச் செயலாளர்.
“பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளை – சென்னைப் பல்கலைக் கழகம்.
“டாக்டர் எம். வரதராசன் – பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருப்பவரும், இன்றையத்தினம் சர்க்காரிடத்திலே வீரச் சுதந்தரப் பதக்கம் பெற்றவருமான நம்முடைய நண்பர் அவர்கள்.
“மற்றொருவர் வி. எஸ். தியாகராச முதலியார் – திருவாரூரைச் சேர்ந்தவர்.
“எம். பி. சோமசுந்தரம் – “கல்கி” பத்திரிகைக்கு அந்த நாளிலே ஆசிரியராக இருந்தவர்.
“அமிர்த கணேச முதலியார் செஞ்சிலுவைச் சங்கத்திலே தலைவராக இருப்பவர்.
“டாக்டர் ஏ. சீனிவாசன் – எம். எல். சி. யாக இருந்தவர்.
“ஏ. சுப்பையா இதைக் கூட்டியவர்.“நான் இப்போது கேட்கிறேன் – இவர்களையெல்லாம் நீக்கிவிட்டு நீங்கள் எந்தத் தலைவர்களைக் காட்டி இந்தியைப் புகுத்தப் போகிறீர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட கருத்துக்குச் சொந்தக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை நடத்திச் செல்லக்கூடியவர்கள்” ஒவ்வொருவர் பின்னாலேயும் பல இலட்ச மக்கள் இருக்கிறார்கள், என்றால் – வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் “உன் பக்கத்திலே அதிக ஆளா, என் பக்கத்திலே அதிக ஆளா, — இதிலே தகராறு இருக்குமே தவிர, தமிழ்நாட்டிலே உள்ள அறிவுபடைத்த அரசியல்வாதிகள் அத்தனைபேரும் இவர்களிலே யார் பக்கத்திலாவது இருக்கின்றார்கள். இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து