14
இந்தி எதிர்ப்பு ஏன்?
1956-ல் என்பதை, உங்களுக்குக் கவனப்படுத்த அந்தப் பட்டியலைப் படிக்கின்றேன். முதலிலே கையெழுத்திட்டவரும் இந்த வாசகத்தை எழுதியவரும் ஆச்சாரியார் அவர்களாவார்.
“இரண்டாவதாகக் கையெழுத்திட்டவர் ஈ. வெ. இராமசாமி பெரியார் – திராவிடர் கழகத் தலைவர்.
“பி. டி. இராசன் – ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்.
“இராஜா சர் முத்தையா செட்டியார் – அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு சான்சலராக இருந்து வருபவர்.
அடுத்தபடி நான், நெடுஞ்செழியன் – தி. மு. கழகப் பொதுச் செயலாளர்.
“திராவிட பார்லிமெண்டரி கட்சித் தலைவர் சுயம்பிரகாசம்.
“எஸ். ஜி. மணவாள இராமானுசம் – அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே துணைவேந்தராக இருந்தவர்.
“டி. எம். கிருஷ்ணசாமி அய்யர் – திருவாங்கூர் கொச்சியிலே பிரதம நீதிபதியாகப் பணியாற்றியவர்.
“இவர்களெல்லாம் கூட சாதாரணமாக இருக்கும்; இப்போது படிக்கின்ற பெயர் உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கும்.
“ம. பொ. சிவஞான கிராமணியார் – தமிழரசுக் கழகத் தலைவர்.
“ஆ. இரத்தினம் – தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனைச் சேர்ந்தவர்.
“எஸ். ஆர். வெங்கட்ராமன் – சர்வண்ட்ஸ் ஆப் இந்தியா சொசைட்டியிலே செயலாளராக இருப்பவர்.