அறிஞர் அண்ணா
13
போனால், அவர்கள் கலைந்துபோய்விட வேண்டும் – இப்படி ஒரு தீர்மானம் போட்டு வைத்திருந்தார்கள். அரசியலிலே ஒரு புதிய தீண்டாமை ஜாதியைச் சிருஷ்டித்தார்கள்.
“அதை நான் சுப்பையா அவர்களுக்குக் கவனப்படுத்தி, ‘இப்படி இருக்கிறதே’ என்றேன்: ‘இல்லை பெரியாரிடத்திலே கலந்து பேசினேன்’, “வரச்சொல்லுங்கள் – பேச சொல்லுங்கள்” – என்று சொன்னார், ஆகையினாலே நீங்கள் வரலாம்” என்றார்.
ஏன் நான் இந்தப் பட்டியலை படிக்கின்றேன் என்றால், இந்தப் பட்டியலுக்கு வெளியே இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் யாருமில்லை. இந்தப் பட்டியலுக்கு அப்பாற்பட்ட அறிவாளிகள் அதிகம்பேர் நாட்டிலே இருக்கமுடியாது. இந்தப் பட்டியலிலே உட்பட்டிருக்கின்ற பெயர்கள் அத்தனையும் தனிப்பட்ட முறையிலேயும் சிறந்தவர்கள்; சிலர் குறிப்பிட்ட சில இயக்கங்களுக்குக் கர்த்தாக்களாகவும் தலைவர்களாகவும் நடத்திச் செல்பவர்கள். இவர்களெல்லாம் எதிர்க்கின்றார்கள்