உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இந்தி எதிர்ப்பு ஏன்?


யாகப் பேசிய அதே ஆச்சாரியார் ‘இந்தி நிச்சயமாகத் தடுக்கப்பட வேண்டும் – இந்தி கட்டாய பாடமோ, இஷ்ட பாடமோ அது எந்த முறையிலே வந்தாலும் தடுக்கப்படவேண்டும் – தமிழ்நாட்டுக்குத் தமிழ் மொழி போதும். மற்ற நாடுகளோடு தொடர்புகொள்வதற்கு ஆங்கிலம் இருந்தால் அது சாலச்சிறந்தது என்று, தனி அறையிலேயல்ல – எங்களையெல்லாம் கூட்டிவைத்துத்தான் சென்ற ஆண்டு சொன்னார்.

“சென்ற ஆண்டு ஒரு நாள் திடீரென்று சுப்பையா பிள்ளை என்ற தமிழ் ஆர்வம் படைத்த ஒரு கண்ணியவான் என்னை வந்து பார்த்தார், அவரிடத்திலே நான் பேசுகிற நேரத்திலே, என்னிடத்திலே அவர் சொன்னார், ‘இந்தியை மறுபடியும் புகுத்தலாமா என்பதற்காக கேர் கமிட்டி விசாரணை நடத்துகின்றது. இந்த நேரத்திலே நாம் ஏதாவது செய்யவேண்டுமே, என்று. தமிழ் நாட்டிலே புதிதாக அதற்குள்ளே உருவாகிவிட்ட விசித்திரமான அரசியல் நிலைமை காரணமாக நான் அவரிடத்திலே சொன்னேன்; ‘ஐயா நான் ஏதாவது செய்தால், நான் செய்கிறேன் என்பதற்காகவே அது வேண்டாம் என்று சொல்லுகின்ற ஒரு மாபெரும் தலைவர் தமிழகத்திலே இருக்கிறார். ஆகையினாலே என்னை முதலில் ஏதும் செய்யச் சொல்லாதீர்கள். அவரைப் போய்ச் செய்யச் சொல்லுங்கள்; அவர் செய்கின்ற காரியத்தை நான் அடுத்துச் செய்கிறேன்’ என்று. ‘நீ யாரைக் குறிப்பிடுகிறாய் என்று எனக்குத் தெரிகின்றது. ஆனால், அவரைக் கேட்டுவிட்டுத்தான் உன்னிடத்திலே நான் வந்து சொல்லுகிறேன்; ஆச்சாரியாருடைய இல்லத்தில் பல கட்சித்தலைவர்களை வரவழைத்து இந்தி ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக நாமெல்லாம் கலந்து பேசலாம். வரவேண்டும்’ என்று அவர்கள் அழைத்தார்கள்.

“அந்த நேரத்திலே திராவிடர் கழகத்திலே ஒரு தீர்மானம் – ‘தீண்டினால் திருநீலகண்டம்’ என்று திருநீலகண்ட நாயனார் போட்ட தீர்மானம் போல் – நாங்கள் வந்தால் அவர்கள் வரக்கூடாது, அவர்கள் இருக்கிற இடத்திற்கு நாங்கள்