18
இந்தி எதிர்ப்பு ஏன்?
பார்களா? சில வீடுகள் திறக்கப்படும். நல்ல வீடுகள் திறக்கப்படாது!
“ஆகையினாலேதான் ஒரு மொழி இந்த நாட்டுக்குள்ளே வருகிறதென்றால், அது எந்த நாட்டுக்குள்ளே வருகின்றது: எந்த நாட்டிலேயிருந்து வருகின்றது? எந்த நேரத்திலே வருகின்றது, என்ன சொல்லிக் கொண்டு வருகின்றது? – இவைகள் நமக்கு விளக்கப்பட வேண்டும். இவைகள் விளக்கப்படுவதற்கு நாட்டை ஆளுகின்ற காங்கிரஸ் அமைச்சர்கள், இன்றையத் தினம் சொல்லுகின்ற பதிலெல்லாம் ‘இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமே! இந்தியாவை ஒன்றுபடுத்த ஒரு மொழி வேண்டாமா?’ என்று சொல்லுகின்றார்கள்.
“நாம் அடிப்படையையே சந்தேகிக்கின்றோம். ‘நீ போடுகின்ற வீசைக் குண்டிலே 40 பலம் இல்லை என்று’ நான் சொல்லியான பிறகு, 2 குண்டு போட்டு ‘80 பலம்’ என்று வாதாடி என்ன பயன்? நான் ‘நீ போடுகின்ற குண்டிலே 40 பலம் இல்லை’ அது தேய்ந்து போய் 22 பலம்தான் இருக்கின்றது’ என்கிறேன். ‘இது வீசைக்குண்டு என்று பெயர்’ ஆகையினால், ‘ஒரு வீசைதான் இருக்கும்’ என்று என்னிடத்திலே வாதாடினால் என்ன பயன்? அதைப்போல ‘இந்தியா ஒரு நாடல்ல’ என்று நாங்கள் வாதாடுகின்றோம். இந்தியா ஒரு நாடாக இருக்கத் தேவையில்லை என்பதற்கு ஆதாரம் காட்டுகின்றோம். இவைகளை மறுத்துப் பேசுவதற்கு முடியாமலும் பிரச்சினையைத் தீர்க்காமலும், இந்தப் பிரச்சினை அப்படியே விவாதத்திலேயிருக்கின்ற பொழுது எதற்காக இந்தியைப் புகுத்துவது.
“இந்த வீடும் உன்னுடையது தான் என்று தீர்மானித்தால் பிறகு ‘நீ அதற்கு என்ன வாசற்படி வைக்கலாம்’ என்று தீர்மானித்துக்கொள், வீடு உன்னுடையதா, என்னுடையதா என்பது வழக்கு மன்றத்திலே இருக்கிறது. உன்னுடைய வழக்கறிஞரும் பேசுகின்றார், என்னுடைய வழக்கறிஞரும் பேசுகின்றார். நீதிபதிக்கு மயக்கமிருக்கின்ற காரணத்தினால் தீர்ப்பு இன்னும் சரி-