26
இந்தி எதிர்ப்பு ஏன்?
இன்றையத்தினம் ஏற்பட்டிருக்கின்றது. அது என்ன சூழ்நிலையென்றால், கேர் என்ற ஒரு காங்கிரஸ் தலைவரை வைத்து வேறு பல காங்கிரஸ் தலைவர்களையும் அவருக்குத் துணையாக வைத்து இந்தி வேண்டுமா? வேண்டாமா? இந்தியை எப்படிப் புகுத்துவது? 1960-க்குள்ளே இந்தியை எப்படித் திணிப்பதென்பதற்கு வழிவகை கண்டுபிடித்தார்கள். அந்த வழிவகை கண்டுபிடித்த – அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையை அந்தக் கமிட்டியிலேயே உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்கள், ‘எனக்கு அது பிடித்தமில்லை’ என்று அவர்களே அந்த அறிக்கையில் குறிப்புத் தந்திருக்கின்றார்கள்; அவர் சொன்ன இரண்டு வாசகங்களை மட்டும் படிக்கின்றேன். டாக்டர் சுப்பராயன் என்பதற்காக மட்டுமல்ல; டாக்டர் சுப்பராயன் பெருத்த அறிவாளி – நல்ல அனுபவசாலி அவைகளுக்காக மட்டும் நான் படிக்கவில்லை. அவர் இன்றையத் தினமும் காங்கிரஸ் உறுப்பினராகத்தான் டில்லிப் பாராளுமன்றத்திலே இருக்கிறார்; அவர் கேர் கமிட்டி அறிக்கையைப் பற்றி தருகின்ற வாக்கியம்.
I fear that the entire report there is
very little evidence of understanding,
imagination and sympathy for the non-
Hindi speaking people of India.
“நான் கேர் அறிக்கையைப் படித்துப் பார்த்தேன், இந்தி பேசாத மக்களுடைய மனப்பான்மையை அறிந்துகொள்வதற்கு அவர்களுடைய நோக்கத்தை அறிந்துகொள்வதற்கு – அவர்களுடைய எண்ணத்தைப் புரிந்து கொள்வதற்கில்லை” –என்று அதிலே குறிப்பிட்டிருக்கின்றார். இப்பொழுது நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தி மொழியை இங்கே புகுத்த வேண்டுமென்றால், இந்தி மொழி யார் யார் பேசுகிறார்களோ அவர்களைக்கேட்டுப் பயனில்லை.