பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

'இந்தி' பொது மொழியா?


வேண்டும். ஆகவே, வடசொற் கலப்பினால் ஆக்கப் பட்டுச் சிறிது காலமாக இப்போது நூல் வழக்கிற் கொணரப்பட்டிருக்கும் இந்தி மொழியை நம் தென் னாட்டவர் கற்றுத் தெரிந்து கொள்வதனால், இவர்கள் வடநாட்டவ ரெல்லாருடனும் பேசி அளவளாவி விடக் கூடும் என்று சிலர் மடிகட்டி நின்று கூறுவது நம்மனோரை ஏமாற்றும் பொய்யுரையேயாம். இந்திமொழி நூல்கள் இனி, மேற்காட்டிய கலவைப் புதுமொழியான இந்தியில் நூல்கள் உண்டான வரலாற்றைச் சிறிது விளக்குவாம். கி.பி. 1400 ஆம் ஆண்டு முதல் 1470 ஆம் ஆண்டு வரையில், அஃதாவது இற்றைக்கு 467 ஆண்டு களுக்கு முன்னிருந்த 'இராமானந்தர்' எனப் பெயரிய ஒரு துறவி, இராமனையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடல் வேண்டுமென வற்புறுத்திச் சொல்லி வட நாட்டின்கட் பல இடங்களிலும் இராம வணக்கத்தைப் பரவச் செய்து வந்தார். கல்வியறிவில்லா வட நாட்டுப் பொதுமக்கட்கு, இராமன் தன் தந்தையின் கட்டளையால் அரசு துறந்து கானகம் ஏகி, அங்குந் தன் மனையாளைப் பறிகொடுத்து அடைந்த துயரக்கதை மிக்கதொரு மன வுருக்கத்தை யுண்டாக்கி, அவரையெல்லாம் எளிதிலே இராம வணக்கத்தின்பாற் படுப்பித்தது. இராமானந்தர் இராமன்மேற் பாடிய பாடல்கள் தாம் முதன் முதல் இந்தி மொழியில் உண்டானவை ; அதனால் அவருடைய பாடல்கள் அடங்கிய இந்திமொழி நூல் 'ஆதிகிரந்தம்' என வழங்கப்படுகின்றது. இனி, இராமானந்தர்க்குப் பின், அவர் தம் மாணாக் கருள் ஒருவரான 'கபீர் தாசர்' என்பவர் இற்றைக்கு 430 ஆண்டுகளுக்கு முன் காசி நகரில் தோன்றினார். நெசவு தொழில் செய்யும் ஒரு மகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவரென ஒரு சாராரும், ஒரு பார்ப்பனக் கைம்