பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

'இந்தி' பொது மொழியா?


உண்டாகின்றனவா? சிறிதும் இல்லையே. எங்கே ஒரு செல்வர், எங்கோ ஒரு குறு நில மன்னர், எங்கோ ஒரு மடத் தலைவர் பள்ளிக்கூடம் வைத்து நடத்த, எண்ணங்கொண்டால், அவரும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் வைத்து நடத்துகின்றனரே யன்றித், தனிப்படத் தமிழுக் கென்றொரு பள்ளிக்கூடம் வைத்து அவர் நடத்துதலை யாண்டுங் கண்டிலேம்! ஆங்கிலர் நடாத்தும் பள்ளிக்கூடங் களிலாவது தமிழாசிரியர்க்குத் தக்க சம்பளங் கிடைக் கின்றது, நன்கு மதிப்பிருக்கின்றது. தமிழ்ச்செல்வர்கள் எங்கோ அருமையாய் வைத்து நடத்தும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களிலோ தமிழாசிரியர்க்கு மிகக்குறைந்த சம்பளந்தான் கிடைக்கின்றது! அதுவல்லாமலும், அப் பள்ளிகளில் தமிழ்கற்பிக்கும் ஆசிரியர்க்கு நன்கு மதிப்பு மில்லை. அதனால், ஆங்கிலக்கல்விக்கழகங்களிற் பயிலும் மாணவர் தமிழை ஊன்றித் திருத்தமாகப் பயின்று புலமையடைவதுமில்லை; தாம் பயிலும் ஆங்கிலத்தையே கருத்தாய்ப் பயின்று, அதிற் பட்டம் பெறுவதற்கு ஒரு சிறு துணையாகவே தமிழைத் தப்புந்தவறுமாய்ச் சேர்த்துப் பயின்று தொலைத்துவிடுகின்றார்கள் ! இங்ஙனமாக இத் தமிழ் நாட்டிலும் பிற நாடுகளிலும் ஆங்கிலர் தம்முடைய பெருமுயற்சியானும் பெரும் பொருட் செலவானும் நடாத்திவரும் பல்லாயிரக்கணக்கான ஆங்கிலக் கல்லூரி களிற் பயின்று பட்டம் பெற்று வரும் பல்லாயிரக்கணக் கான நம் இந்துதேய மாணவர்கள் ஆங்கில மொழி யிற்றான் வல்லவர்களேயல்லாமல், தமிழ் முதலான தாய் மொழிகளிற் சிறிதும் வல்லவர்களல்லர். இத்தேய மெங்கும் இவ்வாறு ஆங்கில மொழிக்கல்வி சிறந்து பரவி வருதற்குந், தமிழ் முதலான தாய்மொழிக்கல்வி சிறந்து பரவாமைக்கும், ஆங்கிலரின் நன்முயற்சியும், இந் நாட்டவரின் முயற்சியின்மையுமே முறையே காரணமாதல் தெற்றென விளங்கா நிற்கும். இனி, ஆங்கிலர் தாங் கைப்பற்றிச் செங்கோ லோச்சும் இவ்விந்திய நாட்டிலேயே தமது தாய்மொழி