உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 'இந்து' தேசியம்
காரணத்தாலேயே மலையின் மறுபுறம் வாழ்ந்த காகாசிய (வெள்ளை நிற) மக்கள் கருப்பர்களைக் கொல்லும் மலை' என்ற பொருளில் Hindu Kush (Killer of the Blacks) என்ற பெயர் வரப் பெற்றதாக Bai Kalhan Singh Naba (பாய் கவன் சிங் நாபா) என்பவர் எழுதிய மஹன் கோஷ் என்ற 1996 இல் வெளியிட்ட நூலில் (பக்.275)உள்ளதாகவும் பதிவுகள் உள்ளன. .[Bhai Kahan Singh Nabha, Mahan Kosh, 1996 edn. p 275.]
காகாசிரியர்கள் (ஆரியர்) இந்தியாவுக்குள் வந்து நுழைந்து நிலையாக அமர்ந்த பின்னரும் இந்திய நாட்டின் ஆதி குடிகளான கருப்பு நிற மக்களை அவர்களது நிறத்தைக் கேலி செய்தும், அவமானம் செய்துமே வந்துள்ளனர். ஆங்கிலத்தில் black என்ற சொல் Black Law, Black art, Black Mail, Black Market போன்றவற்றில் தவறான, மோசமான, இழிவான முன்னொட்டாக பயன்படுத்தப்பட்டு வருவதைப் போலவே, இந்நாட்டை ஆக்கிரமித்த காகாசியர்களும் கருப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தினர்; பயன்படுத்தி வருகின்றனர்.
இழிவுப் படுத்தும் இச்சொற்கள் ஆண்டுகளைக் கடந்தும் அவர்கள் மொழியில் நிலை பெற்று நிற்பது ஆயிரக்கணக்கான கருதிப் பார்க்கவேண்டிய ஒன்றாகும். அவ்வாறாக பஞ்சாபி மொழியில் உள்ள சில சொற்களைச் சுட்டிக் காட்டுகிறார் அவர். Kaala Dhandha (Illegal profession) Kaala Dhan (Black Money) Kaala Chare (Notorious Thief) Kaala Jeebh (Evil Speeking Tongue) போன்றவை ஆகும்.
அவை போலவே Bandar munhan (monkey face) rish jeha (bear – like) எனவும் வந்தேறிய ஆரியர்கள் தங்கள் வருகைக்கு முன்பிருந்தே அங்கு வாழ்ந்துவந்த ஆதிக் அவர்களது உருவத்தை கேவலமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சிதான் இராமாயணத்தில் இம்மண்ணின் மைந்தர்களான, இராமனின் இரு பக்தர்கள் அனுமான் என்றும், ஜாம்பவந்தர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது." (Baldev Singh, PhD, India Tribune, September 28, 2002)
மேலும் 'இந்தி சப்த சாகர்' என்னும் இந்தி மொழிப் பேரகராதியை வாரணாசியில் உள்ள 'நாக நிலை பிரச்சார சபை (Nagari Pracarini Saba) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. மொழிப் பண்டிதர்களான இராமச்சந்திர வர்மா, ஷியாம் சுந்தர்தாஸ் ஆகியோர் அதன் ஆசிரியர்கள் ஆவர். இந்த அகராதியில் 'இந்து' என்ற சொல்லுக்குத் தந்துள்ள பொருள் விளக்கம்:
1.Black and Ugly'
2.Uncultured Brute

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/11&oldid=1672893" இலிருந்து மீள்விக்கப்பட்டது