உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 11


3. A Decoit
4. Any theif Belonging to India...என்பதாகும்
(பேரா. க. அன்பழகன் அவர்கள், திருச்சி திராவிடர் கழக இளைஞரணி மாநாடு, 12-6-1982)
இரண்டாவது கட்டுரையாக உள்ளது "சங்கரமடம்; தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்" என்பதாகும். பெரும்பான்மையான மக்கள் பவுத்த, சமண சமயங்களை பின்பற்றி வந்த நிலையை மாற்ற உழைத்தவரே ஆதிசங்கரர். பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய பலருள் இவர் முதலானவர். ஒரே பிரம்ம சூத்திரத்துக்கு இந்த ஆதிசங்கரர் எழுதிய உரை அத்வைத மதப் பிரிவானது. மத்துவர் எழுதிய உரை த்வைதம் ஆனது. இராமானுஜர் எழுதிய உரை விசிஷ்டாத்வைதம் ஆனது. இப்படி சமஸ்கிருதம் என்ற குழப்ப மொழியில் எழுதப்பட்ட ஒரே நூலுக்கு மூவர் எழுதிய உரைகளும் மூன்று மதப் பிரிவாகவே ஆகிவிட்டது ஒரு வேடிக்கை தான்.
ஆதிசங்கரர் தன் 'சவரக் கத்தி' போன்ற கூர்மையான அறிவைப் பயன்படுத்தி, பவுத்த, சமண மதங்களை அழித்தொழித்து விட்டு உயிருக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை; இருவரும் ஒன்றே எனும் அத்வைதக் கோட்பாட்டை வாயளவில் பேசிக்கொண்டும், சங்கரனுக்கு எதிரே வந்த தாழ்த்தப்பட்ட ஒருவரை ஒதுங்கச் சொன்னபோது அவர் எழுப்பிய கேள்வியால் மக்களின் சமத்துவத்தை ஏற்றுக்கொண்ட கதைகளை உலவவிட்ட அவர்தான், பார்ப்பன மேலாதிக்கத்தைப் பேணிக் காக்கும் சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், காணபத்யம், சௌரம் என்ற ஆறு பிரிவுகளை ஒன்றிணைத்து ஒரே மதமாக நிறுவ முயற்சித்த ஷண்மத ஸ்தாபகர் (ஆறு மத ஒற்றுமையை நிறுவியவர்) என்று புகழப்பட்டவர்.
அவர் திசைக்கொன்றாக நான்கு மடங்களை (பத்ரிநாத், துவாரகை, பூரி, சிருங்கேரி) நிறுவியதாகவும் பதிவுகள் உண்டு. தான் பிறந்த கேரளாவின் காலாடியில் கூட ஒரு மடத்தை அவர் நிறுவிக் கொள்ளவில்லை. ஆனால் நமது காஞ்சிபுரத்து சங்கரர்கள் காஞ்சியில் நிறுவியது தான் சங்கரரே நிறுவிய ஆதிமடம் என்றும், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் பெயரால் காஞ்சி மடத்தைப் பீற்றிக் கொள்ளும் இவர்கள் 2000 ஆண்டு வரலாறு கொண்டது காஞ்சி மடம் என்று புளுகுவது மற்றும் ஒரு அபத்தம் ஆகும். இம்மடத்தின் பொய்மைக் குமிழியை ஆதார ஊசியால் உடைத்துத் தள்ளுகிறார் தொ.ப
அடுத்த கட்டுரை இந்திய தேசியம்' உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு' என்பதாகும். இக்கட்டுரை நமக்குப் பல புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/12&oldid=1673957" இலிருந்து மீள்விக்கப்பட்டது