உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 'இந்து' தேசியம் ஒருவர் சாகிறார்: 50 பேர் காயப்படுகிறார்கள். முடிவு எதனையும் எடுக்காமலேயே மாநாடு குழப்பத்தில் முடிகிறது. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்னரே பிரிட்டன் பிரதமரின் தீர்ப்பை விரைவுபடுத்த அம்பேத்கார் லண்டனுக்கு மீண்டும் சென்று விட்டார்.15 1932 ஆகஸ்டு மூன்றாம் வாரத்தில் (17.08.1932) பிரிட்டன் பிரதமர் 'ராம்சே மெக்டோனால்ட்' வட்டமேசை மாநாட்டில் கொள்கையை அறிவிக்கிறார். இதன்படி பொதுத்தொகுதிகளில் வாக்களிக்கும் உரிமையோடு தாழ்த்தப்பட்டோர் தனித்தொகுதி உரிமையினையும் பெற்றனர். அதாவது பிளவுபடாத அன்றைய சென்னை மாகாணத்தில் சில தொகுதிகளில் பொது வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களோடு அத்தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்காக தாழ்த்தப்பட்டோர் மட்டும் வாக்களித்து ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினரையும் தேர்ந்தெடுப்பார்கள். அந்த இரட்டை வாக்குரிமையே தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமை ஆகும். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரட்டை வாக்குரிமையின் அருமை குறித்து அம்பேத்கார் பின்வருமாறு கூறினார். 'இனப் பிரதிநிதித்துவத் தீர்வினால் அளிக்கப்பட்ட இரண்டாவது வாக்குரிமை என்பது விலைமதிப்பற்றதொரு சலுகை. ஒரு அரசியல் ஆயுதம் என்கிற முறையில் பார்க்கும் போது அதன் மதிப்பு கணிப்பிற்கு அப்பாற்பட்டது. 16 இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்ப்பை எதிர்பார்த்து சிறையிலிருந்து காந்தியடிகள் 11.03.1932லேயே பிரிட்டன் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 'தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதி உருவாக்கும் முடிவினை மேன்மை தாங்கிய மன்னரரசு அறிவிக்குமானால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதை அவ்வரசுக்கு மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” அதன்படியே இனப்பிரதிநிதித்துவத் தீர்ப்பு அளிக்கப்பட்ட மறுநாள் (18.08.1932) 'அத்தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டாலொழிய நான் உத்தேசித்துள்ள உண்ணாவிரதம் வருகின்ற செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் மதிய நேரத்திலிருந்து சாதாரண முறையில் நடைமுறைக்கு வரும்' என்று கடிதம் எழுதினார் காந்தியடிகள்." பிரிட்டன் பிரதமர் இதற்கு செப்டம்பர் 8ஆம் நாள் எழுதிய கடிதத்தில் (08.09.1932) "இன்று பயங்கரமான குறைபாடுகளினால் துன்புற்றுக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், வருங்காலத்தில் அவர் தம் நலனில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தும் விதத்தில், சட்டமன்றங்களில் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/123&oldid=1669812" இலிருந்து மீள்விக்கப்பட்டது