உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காரண தொ-பரமசிவன் 131 ாந்தியடிகளின் செயலாளர் மகாதேவ தேசாயும் சிறையில் இருந்த னத்தினால் அதில் கையெழுத்திடவில்லை, ஆனால் உண்மையில் இது காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம்தான். காந்தியடிகளினுடைய உண்ணாவிரதத்தை முன்னிறுத்தி அம்பேத்காரை இந்த ஒப்பந்தத்திற்கு இணங்க வைத்தவர்கள். இந்து மகாசபைத் தலைவரான மதன்மோகன்மாளவியாவும் சுயராஜ்ஜியக் கட்சி என்ற மிதவாதக் கட்சியின் தலைவர்களாக இருந்த சர்.தேஜ் பகதூர்' சாப்ருவும் எம்.ஆர்.ஜெயகரும் ஆகிய மூவர் தான். இடையிடையே இந்த முயற்சியில் அவர்களுக்கு இராஜாஜியும் உதவுகிறார். (1861-1946) CROLLS அலகாபாத்தில் மதன்மோகன்மாளவியா, சிறீகவுடபிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். அதிலும் பழமைவாத 'சதுர்வேதி' என்னும் பிரிவைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரேவார், தர்பங்கா, காசி, மகாராஜாக்களால் அவரது வேத சாத்திரப் புலமைக்காக ஆதரிக்கப்பட்டவர். 1906இல் இந்து மகாசபையைத் தொடங்கியவர்களில் மாளவியாவும் ஒருவர். இவரே காசி இந்து பல்கலைக் கழகத்தை நிறுவுவதற்குப் பெருமுயற்சி எடுத்தவர்: 1931 முதலாம் வட்டமேசை மாநாட்டுக்கு ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டவர். வருணாசிரம் தர்மத்தில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டவர். கிறித்தவர்களாயும், முஸ்லீம்களாயும் மாறியவர்களை கங்கையில் முழுக்காட்டி(சுத்தி செய்து) ஸ்ரீராம் ஜெய்ராம்' என்று கோசமிடச் செய்து மீண்டும் இந்து மதத்தில் சேர்த்தவர் மாளவியாஜி கவுட் பிராமணர்களைத் தவிர வேறு யார் கையாலும் உணவு கொள்ளமாட்டார். நீரருந்த மாட்டார்” என்று இவரைப் பற்றி சமகாலத்தவரான ராஜகுமாரி அமிருத கௌர் குறிப்பிடுகிறார்.29 ர்த்துத் கா 12- சர்.தேஜ்பகதூர் சரப்ரும் (1875-1949) வழக்கறிஞர் ஆன இவர் அலிகார் நகரில் காஷ்மீரி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். பண்டித மோதிலால் நேருவும் சித்தரஞ்சன் தாசும் இவரது நெருங்கிய நண்பர்கள். அவர்களோடு சேர்ந்து காங்கிரஸ் மிதவாதக் கட்சியைத் தோற்றுவித்தவர்" வைசிராயின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தவர். பின்னாளில் இலண்டனில் உயர்நீதிமன்றத்தில் (Privy Council)பணியாற்றியவர். கெடட்டு ஒப்பந்தம் தொடர்பாகப் பம்பாயில் நடந்த பேச்சு வார்த்தைகளில் முக்கியப் பங்கும் எடுத்துக் கொண்டவர்களில் ஒருவர் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே எனப்படும் பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே ஆவார்(1872-1948) இவர் சுக்ல யஜூர் வேதப் பிராமணர்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/132&oldid=1669822" இலிருந்து மீள்விக்கப்பட்டது