________________
132 'இந்து' தேசியம் 'தேசஸ்த' என்னும் பிரிவினைச் சேர்ந்தவர். இவர்தான் அப்போதைய இந்து மகாசபையின் தலைவர். ஆறடிக்கு மேலான உருவம். பயில்வான் போன்ற தோற்றமும், இராணுவ ஈடுபாடும் கொண்டிருந்ததால் இந்து மகாசபையினரால் ஃபீல்டு மார்ஷல் என்று அழைக்கப்பட்டவர். 'இந்து இராணுவக் கல்விச்சங்கம்' ஒன்றை நிறுவி அதன் சார்பாக 'பௌசலர்' இராணுவப் பள்ளியை நடத்தியவர். முதலாம் வட்டமேசை மாநாட்டில் வேண்டும் கலந்து கொண்டு இராணுவத்தை இந்தியமயமாக்க என்று கோரிக்கை விடுவித்தவர். புனா ஒப்பந்தத்திற்கு முன்னதாக அம்பேத்காருக்கு எதிராக இருந்த எம்.சி.ராஜா, பி.பாலு ஆகியோரின் குழுவினரை தனித்தொகுதி வேண்டாம் என்ற கோரிக்கைக்கு இணங்க வைத்து ஒப்பந்தம் போட்டவர். பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்ட இவர் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. அதன் காரணமும் தெரியவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்றொருவர் பி.எஸ்.காமத் எனப்பட்ட பாலகிருஷ்ண சீதாராம காமத் என்பவராவார். (1871- 1945)இந்து சரஸ்வத் பிராமணர் பிரிவைச் சேர்ந்தவர். இந்து மிதவாதத் தலைவர்களில் ஒருவர். மராட்டியத்தில் இரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் புனாவில் குடியிருந்து வந்தார். 'தமிழ்நாட்டு வைணவ வடகலை ஐயங்காரான இராஜாஜி (திருமலை ஒப்பந்தத்தில் நல்லான் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்) கையெழுத்திட்டவர்களில் மற்றொருவர் ஆவார். பிராமண வகுப்பைச் சேர்ந்த கோவிந்த மாளவியா என்பவரும் கையெழுத்திட்டு இருக்கிறார். கையெழுத்திட்டவர்களில் மற்றொருவரான ஆர்.கே.பாஹ்லே என்பவரும் உயர் சாதிப் பிராமணரே. இவர் பம்பாயில் தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். பின்னாளில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராய் இருந்த இராசேந்திர பிரசாத், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் மற்றொருவர். இவர் பீகாரில் பிராமணரை அடுத்த உயர்சாதியான காயஸ்த வகுப்பில் பிறந்தவர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஏ.வி.தாக்கர் பின்னாளில் 'தக்கர் பாபா' என்று அழைக்கப்பட்டவர். இவர் கோகரி என்ற வணிக சாதியைச் சேர்ந்தவர். உண்மையில் புனா ஒப்பந்தம் காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்கும் ஏற்பட்டதுதான். ஆயினும் காந்தியடிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அவர் மகன் தேவதாஸ் காந்தி கையெழுத்திட்டு இருக்கிறார். பிராமணரல்லாதாரில் உயர் சாதியான குஜராத்திய பனியா என்னும் வணிக சாதியில் பிறந்தவர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது இவர் திருமணம் ஆகாத –