உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.பரமசிவன் 133 இளைஞர். ஒப்பந்தம் முடிந்த ஓர் ஆண்டுக்குள் இவருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களில் ஒருவரான இராஜாஜியின் மகளான லெட்சுமிக்கும். திருமணம் நடக்கிறது. இந்தியாவின் கோடீசுவரர்களில் ஒருவரான ஜி.டி.பிர்லா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். அதே குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.டி.பிர்லா (இராமேஸ்வரதாஸ் பிர்லா) என்பவரும் கையெழுத்திட்டிருக்கிறார். உயர்சாதி வணிகர்களான சங்கர்லால் பேங்கர் என்பவரும், சி.வி.மேத்தா என்ற பார்சிக்காரரும் கையெழுத்திட்ட 'இன்னும் இருவர், மற்றும் ஒருவரான பி.சி.சோலங்கி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். பிஸ்வாஸ் (விஸ்வாஸ்) என்ற வங்காளியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். இவரும் மேல்சாதியினர் என்று தெரிகிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜி.கே.தியோதர்(தேவதர்) என்பவரும் மேல்சாதிக்காரரே. ஆக மொத்தத்தில் 24.09.1932 பம்பாயில் மேலும் பதினெட்டு பேர் இந்துக்கள் மாநாட்டின் இறுதி அமர்வில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டுக்காரரான பத்திரிகையாளர் கே.நடராஜன், அவர் மனைவியான காமகோடி நடராஜன், பண்டித ஹிருதயநாத் குன்ஸ்ரு. கே.ஜி.லிமாயே, டி.கோதண்டராவ், ஜி.கே. காட்கில், அவந்திபாய் கோகலே, கே.ஜெ., சித்தாலியா ராதா காந்த் மாளவியா, ஏ.ஆர்.பட் ஆகியோர் பிராமணர்களாவர். இவர்களில் மூவர் பெண்கள். ஹன்ஸா மேத்தா என்ற மற்றொரு பெண்மணி பரோடாவைச் சேர்ந்த திவான் மனுபாய் மேத்தாவின் மகள். புகழ்பெற்ற டாக்டர் ஜீவராஜ் மேத்தாவின் மனைவி. இலண்டனில் படித்தவர். புருஷோத்தம் தாஸ் தாகூர் தாஸ்(1879-1961) குஜராத்திய பனியா வகுப்பைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி. ஆங்கிலேயரிடம் 'பெருவீரர்' (Knight) பட்டம் பெற்றவர். மதுராதாஸ் வசந்த்ஜி- லால்சந்த் ஹிராசந்த் இருவரும் பார்சி பெருவணிகர்கள். ஹிராசந்த் கப்பல் வணிகம் செய்தவர். ஏனையோர் லல்லுபாய் சாமன்தாஸ், மனோசுபேதார், சோலம், பிரதான் ஆகியோர் ஆவர். இவர்களில் யாரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினராகத் தெரியவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளில் அம்பேத்கார், திவான்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் ஆகியோர் ஓர் அணியினராவர். எம்.சி.ராஜா, பி.பாலு, கவாய்.. ராஜபோஜ் ஆகியோர் மற்றொரு அணியினராக நின்றிருக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/134&oldid=1669824" இலிருந்து மீள்விக்கப்பட்டது