உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 'இந்து' தேசியம்

செய்யும் சூழ்ச்சிகளை, அதற்கு எதிராக எழுந்த எழுச்சியை என பல ஆழமான விவாதங்களை முன்வைக்கிறது.
பெரியார் எழுதிய தலையங்கத்தின் கீழ்க்கண்ட பகுதி இந்த கட்டுரைக்குப் பொருத்தமாக இருக்கும்.
“இந்து மதம்... (என்பது) பார்ப்பன சக்திக்கேற்ப பார்ப்பனரல்லாதாரின் முட்டாள்தனத்துக்கும், மானமற்றத் தன்மைக்கும் ஏற்ப அவ்வப்போது உண்டாகும் திட்டங்களும், கருத்துக்களும் ஆகும்.
உண்டாக்கிக் கொள்ளும் அதுவும் தேசத்திற்கு ஒருவிதம். நாட்டுக்கு ஒருவிதம், ஊருக்கு ஒருவிதம், சமயத்திற்கு ஒருவிதம், சந்தர்ப்பத்திற்கு ஒருவிதம், ஆளுக்கு ஒருவிதம் என்றெல்லாம் சொல்லலாம்.
இராஜாஜி 'பஞ்சமர்'வீட்டில் சாப்பிடுவார்; சங்கராச்சாரி 'பஞ் சமனைக் கண்டதற்குக் குளிப்பார்; சிலர் நிழற் பட்டதற்குக் குளிப்பார்; சிலர் தொட்டதற்குக் குளிப்பர்; சிலர் 'பஞ்சம' ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொண்டு பார்ப்பனர்களாகவே இருப்பார்கள்.
'பலித்தவரை' என்பதுதான் பார்ப்பனியமும், இந்து மதமும்... தமிழ்நாட்டு சிவனும், தமிழ்நாட்டு விஷ்ணுவும், உலகில் 'சிறந்த’ ஸ்தலங்களான காசியிலும், பண்டரிபுரத்திலும், ஜகந்நாதத்திலும் இருந்தால் யாரும் தொட்டுத் தழுவிக் கும்பிடலாம். பஞ்சாப்பில் உள்ள ஆரிய சமாஜத்தார் வேதத்தை 'பஞ்சமர்' உட்பட நாய், கழுதை, குதிரைக்கெல்லாம் கேட்கும்படி வரட்டுக் கத்து கத்தலாம். தமிழ்நாட்டில் வேத சப்தம் நம் காதிலேயே விழக்கூடாது என்பார்கள்......
இன்று பார்ப்பனர்களுக்கு எதுஎப்படிப் போனாலும், தங்களுக்குப் பெரிய ஜாதி என்ற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்த காரியத்தையும், எப்படியும் நடத்திக் கொள்ளலாம் என்பதை உயர் தர்மமாகக் கொண்டிருக்கிறார்கள்." ( விடுதலை : 4-3-1969 )
இக்கட்டுரையை முடிக்கிறபோது, தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கலுக்குத் தமிழ், தமிழ் எனப் பேசி வளர்ந்தவர்களின் தொலைக்காட்சிகள் கூட சங்கராச்சாரியின் தொடங்கும் அவலத்தைச் சுட்டிக் காட்டுகிறார். ஆரியர்களின் வேத ஜாதிய, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த தூக்கிப் பிடிக்கப் பயன்படும், பயன்படுத்தப்படும் இராமாயணத்தை. மகாபாரதத்தை பிரமாண்டம் என்று விளம்பரப்படுத்தி ஒளிபரப்பும் கேவலமும் நடந்துகொண்டுதானே உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/15&oldid=1674008" இலிருந்து மீள்விக்கப்பட்டது