உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 31

அப்படி ஒரு நிலை வந்தால் கோயில்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், "தலித் என்ற பெயரோடு வந்தால் கோயிலுக்குள் அனுமதிக்கமாட்டோம்" என்றும் சங்கராச்சாரியார் கூறிவருகிறார். கோயில் அனுமதி அதிகாரம் இவருடைய குடும்பச்சொத்தோ, மடத்தின் சொத்தோ ஆகாது. ஒருவருடைய சாதியை சட்டப்படி அரசாங்கம்தான் அடையாளம் காட்ட முடியும்.

மதச்சிறுபான்மைச் சமூகங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் மதச்சிறுபான்மை சமூகங்களுடைய உருவாக்கம் என்ன? வட இந்தியாவைப் போல அல்ல இங்கே. மிகப்பெரிய கலைச்செல்வங்கள் உடைய கோயில்கள் இருக்கின்றனவே. இவற்றின் மீது இவற்றை உருவாக்கிவிட்டு இன்றைக்கு வேறு மதத்தில் இருக்கிற மக்களுக்கு ஒரு பங்கு இருந்ததல்லவா? அப்படியானால் அவர்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் போனார்கள்? போகவில்லை, அவர்கள் துரத்தப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. மழையிலும், வெயிலிலும் நின்றுகொண்டு இருக்கிற மக்கள் கோயிலுக்குள் நுழையமுடியாது. மழைக்குக் கூட நுழையமுடியாது. ஏனெனில் சாதியினால் தாழ்ந்தவர்கள். எந்தக் கோயில் திறந்திருந்ததோ அந்தக் கோயிலுக்கு அவர்கள் போய்விட்டார்கள்.
எனவே “இங்கிருந்து துரத்தப்பட்டவர்கள்”, என்று சொல்வதுதான்' பொருத்தம். சமூக அரசியல் ஆதிக்கம் காரணமாக, தென்மாவட்டக் கடற்கரையில் இருக்கிற பரதவர் என்ற சாதியினர் தமிழ்நாட்டில் தொல் பழைய சாதியினர். சங்க இலக்கியத்திலேயே அவர்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அவர்கள் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலேயே நூற்றுக்கு நூறு கிறிஸ்தவர்களாகப் போய்விட்டனர்.
என்ன 'காரணம்? அன்றைக்கிருந்த நாயக்கராட்சியின் நெருக்கடி தாங்கமுடியவில்லை. மறுபுறம் கடற்கொள்ளையர்கள், படைகள். நம்முடைய இன்னொருபுறமோ போர்த்துக்கீசியப் மூச்செல்லாம் நம்முடைய மண்ணில் இருப்பதுபோல அவர்கள் மூச்செல்லாம் அந்தக் கடற்கரையிலும், கடலிலும் கிடந்தது. கடலின். மடியிலே தங்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதனாலே தங்களை, தங்கள் கடலை தங்களுடைய புனிதங்களும், நம்பிக்கைகளும் சார்ந்த நெடிய கடற்பரப்பை காப்பாற்றிக் கொள்வதற்காக அனைவரும் போர்த்துக்கீசியரோடு உடன்பாடு செய்துகொண்டு கிறித்தவ மதத்திற்குப் போனார்கள். தவிர, இயேசுவின் சேதியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/32&oldid=1675668" இலிருந்து மீள்விக்கப்பட்டது