உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


இந்த ஐந்து குறுநூல்களின் தொகுப்பு இப்பொழுது ஏன் வெளிவருகின்றது என்பதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள். மாறிவரும் சமூக, அரசியல் சூழலில் ஓர் ஒற்றைக் கலாசாரத்தை முன்னிறுத்துதல் என்பது இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரானது. அதற்கு வைதீகம், பாரத கலாசாரம், பார்ப்பனியம், வேதாந்தம், இந்துத்துவம் என்று பல பெயர்கள் வழங்கி வருகின்றன. இப்படி பல பெயர்களில் வழங்கி வரும் இந்தச் சித்தாந்தத்தைத் தோலுரித்துப் பார்க்கவும், காட்டவும் நான் செய்த சிறுசிறு முயற்சிகளே இந்த குறுநூல்கள் ஆகும்.
கட்டி எழுப்பப் பெற்ற 'இந்து' என்னும் பிம்பம் யாருடைய நலன்களுக்குச் சேவை செய்ய? என்பதை இந்த நூல் உங்களுக்குச் சொல்லும், வேதம் என்பதைப் புனிதமாக்கி அதைப் பழமைக்குள் திணித்து விவாதத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரமாக்கும் முயற்சி பல காலமாக இங்கே நடைபெற்று வருகின்றது. அதனை இழை இழையாக எடுத்து அலசும் முயற்சியே இந்த குறுநூல்கள். காலத்தின் தேவை கருதி இந்த ஐந்து குறுநூல்களையும் ஒரே தொகுப்பாகக் கொண்டு வரும் கலப்பை பதிப்பகத்தார்க்கு என் நன்றியும், பாராட்டும் உரித்தாகுக. நுட்பமான அணிந்துரை நல்கிய தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கும் எனது நன்றி.


தொ.பரமசிவன்


13.06.2015
பாளையங்கோட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/6&oldid=1671919" இலிருந்து மீள்விக்கப்பட்டது