உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

-கொளத்தூர் தா.செ.மணி

எந்த ஒரு மனிதரின் வாழ்வும், அவரது உழைப்பு, வாய்ப்பு, ஆற்றல், அறிவு, அவர் பேணும் அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையிலேயே என்றாலும், அமைகிறது. வாழ்க்கைப் போக்கை அவர்கள் அறியாமலே தாம் விரும்பும் திசைவழியில் செலுத்தும் ஆற்றல் அரசுக்கும், அரசாங்கத்துக்கும்கூட உண்டு. ஜனநாயக அடிப்படையில் அமையும் அரசாங்கம்கூட அறுதிப் பெரும்பான்மையோடு அமையும்போது பெரும்பான்மைவாத அராஜகம் பல நேரங்களில் தலைத்தூக்கத்தான் செய்கிறது. ஆட்சியில் அமர்ந்தோர் காட்டாறு போல தங்கள் அதிகாரத்தை செலுத்த முற்படும்போது, அது செல்லும் வழியில் உள்ள உதிர்ந்த சருகுகளை, கிடக்கும் கழிவுகளை மட்டுமின்றி, பயன்படும் மரங்களையும், மண்ணையும் அடித்துச் செல்லும்; விளைநிலங்களை நாசமாக்கிச் செல்வதுமுண்டு.
இப்போது இந்தியாவில் ஆட்சிக்கு வந்தமர்ந்துவிட்ட இந்து வெறி, கார்ப்பரேட் ஆதரவு பா.ஜ.க அரசும் அப்படித்தான். அது (‘Now or Never') இப்போது விட்டால் எப்போதும் செய்ய முடியாது என்ற சிந்தனையுடன் வெறித்தனமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பெருமையாகக் கூறிக்கொள்ளப்படும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது முழுதும் உண்மையானது அல்ல எனினும் - இயல்பில் ஒன்றிவிட்ட ஒற்றுமையையும்கூட சிதைத்து வேற்றுமைப்படுத்துவதில் உறுதியாக நிற்கிறது. பன்முகத் தன்மை என்பதை அழித்து ஒற்றைக் கலாச்சாரம், இந்து கலாச்சாரத்தை அவர்கள் முன்வைக்கும் பண்பாட்டுத் தேசியத்தை - நிலைநாட்டத் புனித பிம்பம் கலைவதற்குள் தாங்கள் விரும்பும் கார்ப்பரேட்டுகளை துடிக்கிறது. பெரும்விளம்பர உதவியோடு கட்டி எழுப்பப்பட்டுள்ள உச்ச நிலையில் கொண்டு சேர்க்க உலகம் முழுதும் சுற்றிச் சுழன்று ஓடித் திரிந்து, ஒப்பந்தங்களை அவர்களுக்காக பெற்றுக் கொடுத்து, பதைபதைப்போடு பணியாற்றுகிறது.
இந்து மத அமைப்பதற்கும் வெறியர்கள் இந்து பண்பாட்டுத் தேசியம் அவர்களது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்த சமூக ஆதிக்கத்தை, சமூக மேலாண்மையை போர்வையில் செயலாற்றும் சங்கர மடம். அனைத்து ஆன்மீகப் மட்டங்களிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/7&oldid=1672711" இலிருந்து மீள்விக்கப்பட்டது