உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 63

சுருக்கமாகச் சொல்வதானால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்தின் தோற்றுவாய் என்பது வேதப் பெருமை. வடமொழி உயர்வு. பார்ப்பனர்கள், பார்ப்பனர்களின் இந்துப் பத்திரிகை ஆகிய அடிப்படைகளிலேயே அமைந்தது.
இதற்கு எதிரிடையான நிகழ்வுகளும் இதே காலத்தில் நிகழ்ந்தன. பிளாவட்ஸ்கி அம்மையாரும் திருநெல்வேலியில் ஆல்காட்டும் பார்ப்பனர்களிடம் பெற்ற ஆதரவு, சைவ வேளாளர்களை. எதிரிடையாகச் செயல்பட வைத்தது. 1883இல் தூத்துக்குடிச் சைவ சபையும் 1886இல் பாளையங்கோட்டைச் சைவ சபையும் தொடங்கப் பெற்றன. பிரம்மசமாஜியாக இருந்த மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரம் சைவ சபையைத் தொடங்கக் காரணமானவர்களில் ஒருவரானார். திராவிடம் என்ற சொல்லோடு, வடமொழி செத்த மொழி, தமிழ் வாழும் மொழி என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார்.
தமிழின் மேன்மையை எடுத்துச் சொல்லவும் சைவத்தின் சிறப்பினை பேசவும் சி.வை.தாமோதரம் பிள்ளை, பிள்ளை, ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை, பின்னர் ஞானியார் அடிகள், மறைமலை அடிகள் என "இந்திய தேசியத்துக்கு” வெளியில் தமிழ் அறிவாளிகள் கூட்டம் ஒன்று தோன்றவும் வளரவும் அவரது முயற்சிகள் ஊன்றுகோலாய் அமைந்தன.
1887 வரை தமிழ்நாட்டில் முசுலீம்கள் காங்கிரஸ் இயக்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. 1887இல் சென்னை காங்கிரஸ் மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவர் ரெங்கைய நாயுடு (இவர் இந்து பத்திரிகை நிறுவனத் தலைவராகவும் சில காலம் இருந்தவர்) முசுலீம்கள் காங்கிரசுக்கு வெளியில் நிற்பதைக் குறிப்பிட்டு வருந்துகிறார்.
பார்ப்பனர், சைவ வேளாளர், இசுலாமியரை அடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இக்கால கட்டத்தில் உயிர்ப்பும் விழிப்பும் உடைய சக்தியாக உருவாயினர்.
1885இல் அயோத்திதாசப் பண்டிதர் திராவிடம் என்ற சொல்லை சமூக அரசியல் தளத்தில் வலிமையாக முன்வைத்துப் பார்ப்பனரல்லாதவர் என்ற அடையாளத்தை உருவாக்கினார். அவரது 'திராவிடப் பாண்டியன்' இதழ் 1891இல் உருவாயிற்று.பண்டிதரின் மைத்துனர் ரெட்டமலை சீனிவாசன் பறையன் என்ற பெயரில் 1893இல் இதழ் ஒன்றைத் தொடங்கினார். இவரே பின்னர் டி.எம். நாயருக்கும். அம்பேத்காருக்கும் உதவியாக நின்றவர். 'தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை தேசிய இயக்கத்திற்கு வெளியே உள்ளது' எனக் கருத்துரைத்தவர். சென்னை பொதுச் சாலைகளில் தாழ்த்தப்பட்டோர் நடப்பதற்கான உரிமையினைப் பெற்று, தன் மனைவியின் கல்லறைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/64&oldid=1691059" இலிருந்து மீள்விக்கப்பட்டது