உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 65

தியாகராசர், பி.நடேசன் ஆகியோரை எதிர்மறையாக ஒன்றிணைந்து பணி செய்ய வைத்தன. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பேரால் அவர்கள் 'பிராமணரல்லாதவர் வெள்ளை அறிக்கை' (Non-Brahmin Manifesto) வெளியிட்ட மறுநாளே (20-12-1916) அதற்கு மறுப்பும் எதிர்ப்பும் அன்னிபெசன்டின் புதிய இந்தியா, இதழில் அவரால் வெளியிடப்பட்டன.
இந்த வெள்ளை அறிக்கையினை வெளியிட்ட இந்து நாளேடு இதனைவிட இந்நேரத்தில் ஒரு தற்கொலை முயற்சி இருக்க முடியாதென்றும் வெளியிட்டவர்களின் உள்நோக்கத்தை வலுப்படுத்தும் என்பதால் இது குறித்து விவாதம் நடத்த விரும்பவில்லை என்றும் எழுதியது. மேலும் இந்த இயக்கம் தொடங்கியதிலிருந்து நேர்மையற்ற போக்கினைக் (Sinister) கைக்கொள்வதாகவும் இது பிராமண சமூகத்தின் நலனுக்கும் தேசிய இயக்கத்துக்கும் காங்கிரசின் நோக்கங்களுக்கும் எதிரானதென்றும் எழுதியது. இந்த அறிக்கையினை மறுத்த குத்தி.பி.கேசவப் பிள்ளையினைப் பாராட்டியும் 'இந்து' எழுதியது.
மூன்றுமாத காலம் உதகமண்டலத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அன்னிபெசன்ட் அம்மையார் விடுதலையாகி சென்னை வந்தபோது (1917 செப், 14) அவருக்கு “அரசர்களும் கண்டிராத வகையில் 5 மைல் நீள ஊர்வலத்துடன்" வரவேற்பு தரப்பட்டதாக இந்து இதழ் குறிப்பிடுகிறது. கோயில் குடை பிடித்து வேத பாராயண முழக்கத்துடன் இந்த ஊர்வலம் நடந்ததாகவும் இந்த ஊர்வலத்தில் பாதியில் சுப்பிரமணி அய்யரும் வந்து கலந்து கொண்டதாகவும் ஊர்வலம் முடியும் இடத்தில் மற்றொரு பார்ப்பனர் கூட்டம் வேதபாராயணத்துடன் எதிர்கொண்டு வரவேற்றதாகவும் ‘Madras Mail, இதழ் எழுதுகிறது. திராவிட இயக்க முன்னோடியான டாக்டர் டி.எம். நாயர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார் அன்னிபெசன்ட். ஜஸ்டிஸ் இதழ் அவரை, ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்குக் கிரியா ஊக்கியாக தூண்டுகோலாக இருந்தது அன்னிபெசன்ட் துவக்கிய ஹோம் ரூல் இயக்கம்தான்" என்கிறார் யூஜின் இர்ஷிக் என்ற ஆய்வாளர்.
பி.நடேசனார், பிட்டி தியாகராசர், டி.எம்.நாயர் முயற்சியால் நீதிக்கட்சி எழுந்த நேரத்தில் காங்கிரசின் மக்கள் தலைவராக பெரியார், திரு.வி.க. வ.உ.சி. வரதராஜுலு நாயுடு ஆகிய பார்ப்பனரல்லாத தலைவர்கள் இருந்தனர். இவர்களை தவிர காங்கிரஸ் இயக்கத்தின் பார்ப்பனத் தலைவர்களாக கஸ்தூரிரங்க ஐய்யங்கார், சீனிவாச ஐய்யங்கார், இராஜாஜி ஆகியோர் இருந்தனர்.
நீதிக்கட்சியின் தோற்றத்தோடு தமிழ்ச் சமூக அசைவுகள் விரைவு பெற்றன எனலாம். இதற்குச் சற்று முன்னும் பின்னுமான காலத்தில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/66&oldid=1703832" இலிருந்து மீள்விக்கப்பட்டது