உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 'இந்து' தேசியம்

எனப்படும் இலக்கியச் சான்றேயாகும். உத்தேசமாக கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.5ஆம்...நூற்றாண்டு வரையிலான காலத்தின் தமிழகப் பண்பாட்டை அறியச் சங்க இலக்கியங்கள் தெளிவான சான்றுகளாகும். நகரங்களும் அரசுகளும் அரசர்களும் கிறித்துவின் சமகாலத்திலேயே தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி விட்டதைப் பார்க்க முடிகிறது. பார்ப்பனர்களின் 7 ரிஷி கோத்திரப் பெயர்களையும் தமிழ்நாட்டுப் பேரரசர்கள் பார்ப்பனர்களுக்குக் தலைவணங்கியதையும் அரசனுக்கு அடுத்த நிலையிலிருந்த பணக்கார (நில முதலாளிகள் கிழார்) வேளாளர்களோடு பார்ப்பனர்கள் நல்லுறவு வைத்திருந்ததையும் சங்க இலக்கியங்களிலிருந்து தெளிவாக அறிகிறோம்.
ஆனாலும் அக்காலத்தில் பார்ப்பனர்கள் யாரும் கோயில் பூசை செய்பவர்கள் அல்லர். ஏனெனில் அக்காலத்தில் கோயில் என்பது மிகப் பெரிய சமூக நிறுவனமாக வளர்ச்சியடையவில்லை. மண்ணாலும் மரத்தாலுமான சிறு கோவில்களே அக்காலத்தில் இருந்தன. எனவே அக்காலத்தில் அரசனுக்கு அருகில் இருந்த எல்லாப் பார்ப்பனர்களும் வேள்வி செய்த ஸ்மார்த்தப் பார்ப்பனர்களே. அவர்கள் கோயிலில் பூசை செய்தவர்கள் அல்லர். இவர்கள் வழிபட்ட வேத காலத் தெய்வங்களான் அக்னி, வருணன், இந்திரன் போன்ற தெய்வங்களுக்குக் கோயில்கள் தமிழ்நாட்டில் எப்பொழுதும் கிடையாது. ஆயினும் அரசன் பணிந்து வணங்கும் அளவுக்கான அதிகாரம் பார்ப்பனர் கையில் இருந்தது என்பது மட்டும் அழுத்தமான வரலாற்று உண்மையாகும்.
இந்த அதிகாரத்தைத் தொடர்ந்து சில நூற்றாண்டுகாலம் பார்ப்பனர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தனர். பின்னர் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் ---தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் ஒரு பேரலையாக எழுந்தது. தனி ஒரு கடவுளை ஏற்றுக் கொள்ளாத சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிராக அனைத்து சாதிகளும் பார்ப்பனர்களால் ஒன்று திரட்டப் பட்டனர். வருவதை உணரா? வேளாளர்களும் பார்ப்பனர்களோடு முழு மூச்சாக இந்த இயக்கத்தில் ஒன்றிணைந்தனர். அதன் விளைவாக சமண பௌத்த மதங்கள் தமிழ்நாட்டில் வேரோடு சாய்க்கப்பட்டன. ஏனைய கோயில்கள் கற்கோயிலாக மாற்றப்பட்டன. அவைகளின் பெயரில் மிக பெரிய சொத்துக்கள் உருவாயின. கோயில்கள் அரசியல் அதிகாரத்தின் துணை நிறுவனங்களாக மாறி வளர்ந்தன.
தமிழில் இருந்த ஆகமங்களைப் பார்ப்பனர் வடமொழியில் பெயர்த்து வைத்துக் கொண்டனர். வடநாட்டில் உள்ள கோயில்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/83&oldid=1708888" இலிருந்து மீள்விக்கப்பட்டது