தொ.பரமசிவன் 83
இந்த ஆகம முறைகள் இன்றும் பொருந்தாது. ஏனென்றால் அங்கே தமிழ்நாட்டில் இருப்பதைப் போலப் பெரிய கோயில்கள் 5% கூடக் கிடையாது. அவற்றின் கட்டுமானக் கலையும் திராவிடக் கலையல்ல..
பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் அர்ச்சகர் என்ற பெயரில் உருவ வழிபாட்டுக்கு மாறிக் கருவறையில் நுழைந்தனர். கோயிலின் ஆன்மீகத் தலைமைப் பதவியைக் கைப்பற்றினர். கோயில் சார்ந்த பார்ப்பனர்களின் உணவு, உடை, உறைவிடம் (வீடு), வேதக் கல்வி ஆகிய அனைத்துத் தேவைகளும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ விசய நகர அரசர்களால் முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேதக் கல்விக்காக அரசர்களால் விடப்பட்ட மானியத்துக்குக் கிடைப்புறம் என்று பெயர். அன்றைய அரசுகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்விச் செலவை ஏற்றன. அனைவருக்கும் கல்வி என்ற சமண மதக் கோட்பாட்டை அரசர்கள் ஏற்கவிடாமல் பார்ப்பனர்கள் பார்த்துக் கொண்டனர். அது முதற்கொண்டு 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முசுலீம் படையெடுப்புகளால் ஏற்பட்ட சிறு இடையூறைத் தவிர 18ஆம் நூற்றாண்டின் முதற் பகுதி வரை பார்ப்பனர்களின் அனைத்துத் தேவைகளும் அரசாங்கத்தால் (மக்களின் வரிப் பணத்தால்) நிறைவு செய்யப்பட்டன. அரசர்கள் போர் புரியும் போது பார்ப்பனர்களை எவ்விதத் தாக்குதலுக்கும் உட்படுத்தக் கூடாது என்ற சட்டமும் வகுக்கப்பட்டிருந்தது. (சிலப்பதிகாரத்தில் மதுரை நகரைக் கண்ணகி எரிந்து சாம்பலாகட்டும் என்று சாபமிடுவதாகக் கூறப்படும்போதும் பார்ப்பனர்களை இந்நெருப்பு தீண்டக்கூடாது என்று சொல்லும் அளவுக்குப் பார்ப்பனர்கள் செல்வாக்கு உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்) ஏறத்தாழ 18 நூற்றாண்டு காலம் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டு அரசுகளின் சலுகையளிக்கப்பட்ட குடிமக்கள் (Privileged Citizens) ஆக வாழ்ந்தனர் என்பது யாராலும் மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும். (இவர்கள் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசுச் சலுகை 'என்ற பெயரில் தங்கள் உரிமையை அரை நூற்றாண்டுக் காலம்கூட அனுபவிக்கத் தடையாக இருந்து வருகின்றனர்.)
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் மெக்காலேயின் ஆங்கிலக் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. மனுதர்ம நெறிப்படி காலங்காலமாக கல்வியைத்
தங்களுடைய ஏகபோகமாகவும், மற்றவர்களுக்கு
உரிமையில்லாமலும் ஆக்கி வைத்திருந்தார்கள் பார்ப்பனர்கள். தங்களை விரைவாக ஆங்கிலக் கல்விக்கு உட்படுத்தினர். அதன் விளைவாக 1875க்குள் ஆங்கிலக் கல்வி பெற்ற பார்ப்பனர் அனைவரும் நீதித்துறை வருவாய்த்துறை ஆகிய இரண்டு துறைகளையும் தங்கள்