90 'இந்து' தேசியம்
இப்படியாகத் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கம் நடைமுறையில் பார்ப்பனர் கையிலேயே இருந்தது. நீதிக்கட்சி அரசில் டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) அவர்கள் கொண்டு வந்த தேவதாசி முறை ஒழிப்பு மசோதாவை எதிர்த்து சத்தியமூர்த்தி ஐயர் 'இனிமேல் இறைவனுக்குத் தேவதாசித் தொண்டு செய்வது யார்? என்று கேட்க அதற்கு முத்துலெட்சுமி, ஏன் இனிமேல் உங்கள் இனப்பெண்கள் இத்தொண்டைச் செய்யட்டுமே' என்றார், அதன் பிறகும் சத்தியமூர்த்தி ஐயர், 'நா சட்டத்தை மீறிச் சிறை சென்றாலும் செல்வனே தவிரச் சாத்திரத்தை மீறி நரகத்திற்குப் போக மாட்டேன்' என்று பேசினார். 1927 இல் இந்து அறநிலையத்துறைச் சட்டத்தை நீதிக் கட்சி கொண்டு வந்த போது காங்கிரஸ் தலைவர்களான சத்தியமூர்த்தி, சீனிவாச ஐயங்கார் ஆகியோர் அதனை மூர்க்கமாக எதிர்த்தனர். இந்து பத்திரிகை இதற்கான சட்ட மசோதாவைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியது. இச்சட்டத்தை ஆதரித்துப் பேசிய நீதிக் கட்சித் தலைவர் நடேச முதலியார் கோயிலின் நிதி ஆதாரங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்து நலன்களுக்காகவும், செத்துப் போன சமஸ்கிருத மொழியை வளர்க்கவுமே பயன்படுத்தப்படுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்த இப்படியொரு சட்டம் தேவையென வலியுறுத்தினார். 1928இல் காந்தி வர்ணாசிரம தர்மத்தை வெளிப்படையாக ஆதரித்தும் நியாயப்படுத்தியும் பேசினார். இத்தகைய நிகழ்ச்சிகள் தாம், காங்கிரசில் ஏமாற்றம் அடைந்து இருந்த பெரியாரைச் சுயமரியாதை இயக்கம் காணத் தூண்டின.
நீதிக்கட்சியும் பார்ப்பனர் தோல்வியும்
இந்த நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் கண்விழித்து நகர்ப்புறம் சார்ந்து, ஆங்கிலக் கல்வி பயின்று, சிறிய அரசுப் பதவிகளில் அமர்ந்த தமிழர்கள் ஆங்கிலேய ஆட்சியிலும் பார்ப்பனர்களின் செல்வாக்கைக் கண்டு திடுக்கிட்டனர். பார்ப்பனர் அல்லாத ஏனையோருக்காகத் திராவிட மாணவர் சங்கம் என்ற ஒன்றை நிறுவினர். கேரளத்தைச் சேர்ந்த டாக்டர்.டி.எம்.நாயர், ஆந்திராவைச் சேர்ந்த பி.தியாகராயச் செட்டியார், தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர்.நடேச முதலியார் ஆகியோர் பெருமுயற்சி செய்து தமிழர்களை ஒன்று திரட்டி 1916 டிசம்பரில் பார்ப்பனரல்லாதார்
அறிக்கை (Non Brahmin Manifesto)
என்ற புகழ் பெற்ற அறிக்கையினை வெளியிட்டனர். பின்னர் தென்னாப்பிரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பி வந்திருந்த, தாழ்த்தப்பட்ட மக்களின் (அம்பேத்காருக்கும் முற்பட்ட பெருந்தலைவரான இரட்டைமலை