உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தொ.பரமசிவன் 91

சீனிவாசன் இவர்களின் முயற்சிக்குத் துணை நின்றார். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில் வந்த 1920 தேர்தலில் திராவிடர் கட்சியான (ஐஸ்டிஸ்) நீதிக்கட்சி வெற்றி பெற்றது.
1920 முதல் 1937 வரை தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சி அல்லது அதனுடைய ஆதரவு பெற்ற ஆட்சி நடைபெற்றது. பார்ப்பனர்களிடம் மட்டுமே சிக்கிக் கிடந்த அரசியல் அதிகாரத்தை இக்காலக் கட்டத்தில் தான் ஓரளவேனும் பார்ப்பனரல்லாதார் பறித்தெடுத்துக் கொண்டனர். நீதிக் கட்சியின் ஆட்சியின் போது பார்ப்பனர்களின் வலிமையான எதிர்ப்புக்கு ஊடே நிகழ்ந்த சாதனைகள், பிற்காலத்தில் தமிழர் பெற்ற விழிப்புணர்ச்சிக்கு காரணமாக அமைந்தன. நீதிக்கட்சியின் இத்தகைய நடவடிக்கைகள் அன்றைய சமூக நிலையில் மாபெரும் சாதனைகளாகும்.
1. 1921 செப்டம்பரில் நீதிக்கட்சி அரசாங்கம் வெளியிட்ட முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை (Communal G.O) அரசுப் பதவிகளில் பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கம் இதில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. (அரசாணை எண்: 1. M.R.O Public Ordinary Services G.O. No.613 dated 16.2.21)
2. 1922இல் வேலை வாய்ப்பில் மட்டுமல்லாமல் பதவி உயர்விலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது.(அரசாணை எண்: 1.M.R.O. Public Or- dinary Services G.O. No.658 dated 15.8.22
3. மேற்குறித்த இரு ஆணைகளையும் அமுல்படுத்தும் பொறுப்பை அங்கங்கே இருந்த அதிகாரிகளிடம் விட்டு விடுவதற்கு அரசு தயாராக இல்லை. பெரும்பான்மையாக பார்ப்பனர்களே அதிகாரிகளாக இருந்த நிர்வாக அமைப்பில் இந்த ஆணைகளின் தலைவிதி எப்படி முடியும் என்பது நீதிக்கட்சியின் தலைவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே அரசுப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நீதிக்கட்சி அரசாங்கம் 1924-இல் Staff Selection Board என்ற பெயரில் வாரியம் ஒன்றை நியமித்தது. (இதுதான் T.N.P.S.C. எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் முன்னோடி அமைப்பாகும்). இதன் விளைவாகத்தான் 1947க்கு முன்னால் தமிழ்நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/92&oldid=1716048" இலிருந்து மீள்விக்கப்பட்டது