பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கணிசமான அளவில் அரசுப் பணிகளில் நுழைய முடிந்தது. இன்றைய அளவில் ஒப்பிடும்போது இவர்களின் எண்ணிக்கை அன்று மிகக் குறைவுதான். ஆனால் அன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் வேறெந்த மாநிலத்தையும் விடப் பார்ப்பனரல்லாதார் அரசுப் பணிகளில் கணிசமாக இடம் பெற்றது தமிழ்நாட்டில்தான்.
4.நீதிக்கட்சி ஆட்சியில் பார்ப்பனரல்லாதார் விடுதலைக்குச் செய்யப்பட்ட மற்றுமொரு அரசு நடவடிக்கை, இந்து அறநிலையத்துறையை 1928இல் உருவாக்கியது ஆகும்.
5.தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர் எம்.சி.இராசா அவர்களை நீதிக்கட்சி அறநிலையத் துறை அமைச்சர் ஆக்கியது.
எம்.சி.இராசா பின்னர் அம்பேத்காருக்குத் துரோகம் செய்துவிட்டு ராஜாஜி அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். அவரை வைத்துக்கொண்டே, தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் அன்றைக்கு எழுந்து வந்த தலித் சமூக எழுச்சியை உடைத்தார்கள். அது ஒரு தனிக்கதை.
காலங்காலமாகப் பார்ப்பனர்கள் சமூகத்திலும், அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு அவர்களின் பொருளாதாரப் பின்புலமும் ஒரு காரணமாக இருந்தது. தமிழ்நாட்டின் நஞ்சை நிலங்கள் கணிசமான அளவு கோயில்கள், மடங்கள் ஆகியவற்றின் பிடியில் இருந்தன. கோயில் பணிக்காகப் பார்ப்பனர்களுக்கு அரசர்கள், மடத்தலைவர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரால் தரப்பட்ட நஞ்சை நிலங்கள் அவர்கள் கையில் இருந்தன. அத்தோடு கோயில்களின் நில, பண வருமானத்தையும் கோயில் பார்ப்பனர்களே 'நிருவாகம்' என்ற பெயரில் அனுபவித்து வந்தனர். கிறித்துவர்களால் ஆன வெள்ளை அரசு தன்னுடைய பாதுகாப்புக்காக இந்து மத சம்பந்தமான விசயங்களில் தலையிடாமலே இருந்து வந்தது. எனவே நீதிக்கட்சி அரசு 1928இல் இந்தியாவிலேயே முதல்முறையாக இந்து அறநிலையத் துறையினை நிறுவி, கோயிற் பார்ப்பனர் மடாதிபதிகள் ஆகியோர் பொதுச் சொத்துக்களை விருப்பம் போல் அனுபவித்து வந்ததை நிறுத்தியது. அதிகார மையங்களாகிய நகரங்களை நோக்கி 1930-க்குப் பிறகு பார்ப்பனர்கள் வேகமாக நகர்ந்து வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
பக்கம்:இந்து தேசியம்.pdf/93
Appearance
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை