________________
தொ.பரமசிவன் 95 காங்கிரஸ் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து ராஜாஜி கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானம் தோற்றதைக் காரணம் காட்டி ராஜாஜி காங்கிரசின் எல்லாப் பொறுப்பிலிருந்தும் நாலணா உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கூட விலகிவிட்டார். இந்தக் கால இடைவெளியில் தான் இரண்டாம் உலகப் பெரும் போர் நிகழ்ந்தது. காங்கிரஸ் கட்சி ஆகஸ்டு புரட்சி எனப்படும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை உக்கிரமாக நடத்தியது. காங்கிரசிலிருந்து விலகி விட்ட ராஜாஜியைத் தவிர காங்கிரசின் அனைத்து மாவட்டத் தலைவர்களும் சிறையிலிருந்தனர். ராஜாஜியோ கல்கத்தாவில் வணிகப் பேரவை நடத்திய கூட்டத்தில் ஆகஸ்டு புரட்சியைக் கேலி செய்தும் பேசினார். இந்த இடைவெளியில் ராஜாஜி தமிழ்நாட்டில் தனக்கு ஆதரவாகப் பத்திரிகை பலத்தை மட்டும் உறுதியாகப் பற்றிக் கொண்டார். ரா.கிருஷ்ணமூர்த்தி ஐயர் என்ற கல்கியை முன்னரே திரு.வி.க.விடத்தில் பயிற்றுவித்து ஆனந்தவிகடன் பத்திரிகையைத் தொடங்க வைத்தார். கல்கியும் தன் வாழ்நாள் முழுவதும் ராஜாஜியின் ஆஸ்தான எழுத்தாளராக இருந்து அவரை ஞானி. கர்மயோகி, தவமுனிவர், ஜனக மகராஜா என்று எழுதிக் காட்டினார். 1945 ஜூலையில் ஆகஸ்டு இயக்கம் எனப்பட்ட 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் சிறைபட்டிருந்த காங்கிரஸ் தலைவர்கள் வருவதை எல்லோரும் வெளியே வந்தனர்.சுதந்திரம் அருகில் அறிந்தவுடன் வெளியிலிருந்த ராஜாஜி காங்கிரசில் சேர முயற்சித்தார். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்குக் காலியாக இருந்த 37 இடங்களில் ஒன்றான திருச்செங்கோட்டில் இருந்து அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கு ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. தனக்குத் தெரியாமல் திருச்செங்கோட்டில் தேர்தல் நடந்தது எப்படி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராசர். திகைத்தார். 1945 அக்டோபர் 31-இல் திருப்பரங்குன்றத்தில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 'ராஜாஜியை தமிழ்நாடு காங்கிரசுக்குள் சேர்க்கக் கூடாது' என்று தீர்மானம் நிறைவேற்றியது. திருச்செங்கோட்டில் நடந்த கபடச் செயலுக்குத் துணையாக அகில இந்தியக் கமிட்டி ராஜாஜிக்கு ஆதரவளித்தது. ராஜாஜி 1945 ஆகஸ்டிலேயே காங்கிரஸில் சேர்ந்து விட்டதாக அ.இ.காங்கிரஸ் தலைவர் மௌலானா ஆசாத் அறிக்கை வெளியிட்டார். கடைசியில் அ.இ.கா.க. முடிவின்படி ராஜாஜி காங்கிரசில் சேர்ந்துவிட்டார். ஆனால்