________________
96 'இந்து' தேசியம் ஏமாந்து போன த.நா.கா.க. தலைவர்களின் திருப்பரங்குன்றம் தீர்மானம் தோற்றது. மோசடியான திருச்செங்கோடு தேர்தல் செல்லுபடியாயிற்று. அறிஞர் அண்ணா இதைத்தான் 'கோடு உயர்ந்தது. குன்றம் தாழ்ந்தது எனத் தலையங்கம் எழுதிக் காட்டினார். இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு மனிதர் தினமணி டி:எஸ்.சொக்கலிங்கம் ஆவார். இவர் ஆஷ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சிறைதண்டனை பெற்ற தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளையின் உடன்பிறந்த தம்பியாவார். 1937-இல் சென்னை சட்டசபைக்குத் தென்காசி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தினமணி இதழின் முதல் ஆசிரியர், சிறந்த பத்திரிகையாளர். இவரே கடைசி முயற்சியாக ராஜாஜி தமிழ்நாட்டு காங்கிரசைக் கைப்பற்ற முனைந்த பொழுது அவருக்கு எதிராகக் காமராசரை முன்னிறுத்தியவர். இவர் நடத்திய தினசரி நாளிதழில் தலையங்கங்கள் ராஜாஜியின் காங்கிரஸ் துரோகத்தை அம்பலப்படுத்தின. அவை, 1945 தமிழர் புரட்சி என்ற பெயரில் தொகுக்கப் பெற்று 1957-இல் நூல் வடிவம் பெற்றுள்ளன. 1946 சனவரியில் காந்தியார் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது காங்கிரஸில் நாலணா உறுப்பினராகக் கூட இல்லாத ராஜாஜி சம்பந்தி என்ற முறையை வைத்துக் கொண்டு காந்தியைக் கணநேரமும் பிரியாமல் உடன் இருந்து கொண்டார். இதனால் தமிழ்நாட்டு காங்கிரசின் தலைவரான காமராசர், காந்தியிடம் கட்சி நடப்புகளை கூடப் பேச முடியாமல் போய்விட்டது. சுற்றுப்பயணம் முடிந்து திரும்பும்போது காந்தியார் தமிழ்நாட்டில் சிலர் ‘க்ளிக்’ அரசியல் நடத்துகின்றனர் என்று மறைமுகமாகக் காமராசரைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையைக் கண்டித்து காமராசர் பதவி விலகத் தயாரானார். காந்தியார் மழுப்பலான ஒரு சமாதான விளக்கத்தைத் தன்னுடைய அரிஜன் பத்திரிகையில் வெளியிட்டார். ஒட்டு மொத்த விளைவாக அரிஜன சேவைக்கு என்ற பெயரில் ராஜாஜி மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். 1946 மார்ச் தேர்தலில் ராஜாஜியை த.நா.கா.க. வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டும் அவர் தேர்தலில் நிற்க மறுத்து விட்டார். தேர்தலில் காங்கிரசுக்குப் பெரும்பான்மை கிடைத்தது. ராஜாஜியைத் தமிழக முதலமைச்சராக்கும்படி காந்தியடிகள் த.நா. சட்டமன்ற உறுப்பினர்களில் 38 பேர் ராஜாஜிக்கு எதிராகவும் வாக்களித்தனர். எதிராகவும் வ ராஜாஜிக்கு ஆதரவாகவும் 146 -