இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எங்கே
செல்லலாம் ?
சைக்கிள் ஏறிக் கொள்ளலாம் :
சைதாப் பேட்டை செல்லலாம்.
காரில் ஏறிக் கொள்ளலாம் :
காரைக் குடிக்குப் போகலாம்.
ரயிலில் ஏறிக் கொள்ளலாம் :
ராமேஸ் வரம் செல்லலாம்.
கப்பல் ஏறிக் கொள்ளலாம் :
கல்கத் தாவை அடையலாம்.
பறவைக் கப்பல் ஏறலாம் :
பாரிஸ் நகரம் போகலாம்.
மனே ரதத்தில் ஏறலாம் :
வைய மெல்லாம் சுற்றலாம் !
8