இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பழநி மலைக்குச் சென்று வந்தேன்;
பஞ்சா மிர்தம் கொண்டு வந்தேன்.
காசி நகரம் சென்று வந்தேன்;
கங்கை நீரைக் கொண்டு வந்தேன்.
திருப்ப திக்குச் சென்று வந்தேன்;
தித்திப்பு லட்டுக் கொண்டு வந்தேன்.
இராமேஸ் வரம் சென்று வந்தேன்:
என்ன நானும் கொண்டு வந்தேன் ?
ஊ... ஊ... ஊ...
ஊ... ஊ... ஊ...
ஊது கின்ற சங்கில்
ஒன்று வாங்கி வந்தேன்
10