பக்கம்:இன்னமுதம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகை வீரட்டானம் விழுப்புரத்தை அடுத்த பண்ணுருட்டியிலிருந்து சில கல் தொலைவிலுள்ளது திருவதிகை வீரட்டானம் என்ற ஊர். முதன் முறையாக நாவுக்கரசர் தம் சூலை நோயைப் போக்கிக் கொள்ளப் பாடியது இவ்வூரில்தான். கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேயிர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றி னகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேன்.அதி கைக்கெடில வீரட்டா னத்துறை யம்மானே. “எமனைப்போல் அடியேனை வந்து வருத்தும் இச்சூலை நோயை (வயிற்று வலியை விலக்க மாட்டீர்; இந்நோயை நான் அடைவதற்குக் காரணமாகக் கொடுமைகள் பல செய்து விட்டேனோ எனில் அவற்றை நான் அறியேன்; விடையில் ஏறியுள்ள பெருமானே! இரவு பகல் எப்பொழுதும் பிரியாமல் உன் திருவடியையே வணங்குவேன். என் வயிற்றின் உள்ளே குடலோடு கலந்து என்னை முடக்கி வருத்துதலால் அடியேன் அதைப் பொறுக்காமல் வருந்துகின்றேன்; இவ்வருத்தம் அகற்றி ஆட்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/35&oldid=747037" இலிருந்து மீள்விக்கப்பட்டது