பக்கம்:இன்னமுதம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்களை இழந்த நம்பியாரூரர் காஞ்சீபுரம் சென்று இறைவனை வழிபட்டு இறைவியின் திருவருளால் இடக்கண் பார்வையைப் பெற்றார். உமையின் திருவருளால் தாம் பெற்ற பார்வையில் மகிழ்ந்து பாடியதாகும். இப்பாடல். (காஞ்சிப்பதி செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது.) எள்கலின்றி இமையவர் கோனை ஈசனைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்து உமை நங்கை வழிப டச்சென்று நின்றவா கண்டு வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவியோடித் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண்ணடி யேன் பெற்றவாறே "தானும் இறைவனின் ஒரு கூறு ஆதலால், ஈசனை வழிபாடு செய்யத் தேவையில்லை என்று இகழாமல், தேவர்கள் தலைவனை, ஈசனை வழிபாடு செய்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/54&oldid=747058" இலிருந்து மீள்விக்கப்பட்டது