பக்கம்:இன்னமுதம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 е இன்னமுதம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிருபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவதினியே "பால் ஊட்டவேண்டிய நேரத்தை நினைந்து பார்த்து ஊட்டும் தலையாய அன்புடைய தாயைவிடப் பரிவு காட்டி, பாவியேனாகிய என்னுடைய ஊனுடம்பை இளைக்குமாறு செய்து, அகத்தே ஒளி பெருகுமாறு செய்து, முடிவிலாத தேனைச் சொரிந்து, யான் செல்லும் இடந்தோறும் (என்னை ஆட்கொள்ள வேண்டி) என்னைத் தொடர்ந்து வந்த செல்வமே ! சிவபெருமானே! இன்றுயான் உன்னைத் தொடர்ந்து உறுதியாக உன் திருவடிகளைப் பற்றிக் கொண்டேன். இனி நீ என்னை விட்டு எங்கே செல்ல முடியும்? (சாலப் பரிந்து- மிகுதியான பரிவு காட்டி, ஊனினை உருக்கி- இவ்வுடம்பை இளைக்குமாறு செய்து; உலப்பு இலாட முடிவிலாத சிக்கென- கெட்டியாக) முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 'முத்திக்கு உரிய வழிகளை அறியும் திருவருள் வாய்ப்பு இல்லாத மூர்க்கர்களோடு கூடி வாழ்க்கையை வாழ முயல்கின்ற என்னை, அன்பு நெறியை அறிவித்துப் பழைய வினைகள் அனைத்தும் சிதறிப் போகும்படி என் சித்தத்தில் நிறைந்துள்ள ஆணவமாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/62&oldid=747067" இலிருந்து மீள்விக்கப்பட்டது