பக்கம்:இன்னமுதம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 е இன்னமுதம் "காலத்தையும் கற்பனையையும் கடந்து நிற்கின்ற பழம் பாடலாகிய வேதத்தின் கருவூலத்துக் கலைகளைக் கரைகண்ட செல்வர்கள் தேடி வைத்த கடவுளே! உயிராகிய பாத்தியில் உணர்வாகிய நீரைப் பாய்ச்சி வளர்ப்பவர்கட்கு ஒளிபூத்து அருளைப் பழமாகத் தரும் மலரோடு கூடிய கற்பக மரமே! எழுத முடியாத மழலைச் சொற்கள் ததும்பும் பசிய குதலை பேசும், சோலையில் வாழும் கிளியே அனைத்துயிர்கட்கும் உயிர்க்குயிராயும் தோன்றாத் துணையாயும் உள்ள இறைவனுக்கோர் துணையாகி நின்று, துவாதசாந்தம் என்று கூறப்பெறும் பெரு வெளியில் துரியாதீத பரநாத மூலத்தலத்தில் விளையாடும் முழு முதலே 1 முத்தந் தருவாயாக! இறைவனுடைய மூன்று கண்கட்கும் விருந்தாய் அமைந்தவளே! முத்தந் தருவாயாக." (கருவூலம்- பொக்கிஷம்; பழம்பாடல்-வேதம்; கலைமாச் செல்வர் ஞானிகள்; ஆலவாலத்து- பயிர்செய்வதற்குரிய பாத்தி, குதலை- மழலையினும் முற்பட்ட சொல்) துவாதசாந்தப் பெருவெளி என்பது தலையில் உச்சிக்கு மேல் 12 விரல்கிடை தாண்டி இருக்கும் இடம் இதுவே இறைவன் உறைகின்ற இடம் என்பர். (துவா-துவி- தோ இரண்டு; தசம்-பத்து; 2+10-12 அந்தம்-முடிவு) துரியாதீதம்- ஆன்மா மூலாதாரத்தில் தங்கி அவிச்சையை மட்டும் அங்கீகரிக்கும் ஐந்தாவது நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/76&oldid=747082" இலிருந்து மீள்விக்கப்பட்டது