பக்கம்:இன்னொரு உரிமை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184 சு. சமுத்திரம்

மில்ல. வரதட்சணையைப் பற்றி பேசுறவங்களும் எழுதுறவங்களும் பெண்ணுக்குச் சொத்துரிமை இருக்கிறதை வற்புறுத்தாததால் வர்ற கோளாறு இது. ஏழைகிட்ட பணம் கேட்கிறது அரக்கத்தனம். ஆனால் இருக்கிறவங்க கிட்ட நியாயமா சேரவேண்டியத கேட்காதது மடத்தனம். நான் அரக்கனும் இல்ல... மடையனும் இல்ல!”

வக்கீல் மோகன் இப்போது மனைவியை ‘இம்ப்ரஸ்’ செய்ய நினைத்தவன் மாதிரியும், இதர நபர்களை ‘ஜூரி’ மாதிரியும் நினைத்துக்கொண்டு கைகளை ஆட்டி ஆட்டிப் பேசினான்:

“நீங்க ஏமாறல... தமயந்தியை ஏமாத்தப் பார்த்தீங்க. நாங்க உண்மையிலேயே பிறந்த மண்ணுல பிடி இருக்கணுங்கறதுக்காக, நகை பணத்தைப் பொருட்படுத்தாமல் பெண்ணை மட்டுமே பொருட்படுத்தினோம். ஆனால், இவள் கழுத்தில ஏற்கெனவே இருந்த நெக்லஸைக்கூட நீங்க கழட்டிக் கொண்டதாய் இவள் சொன்னபோது என்னால தாளமுடியல. எங்களை நீங்க ஏமாளியா நினைச்சது தெரிஞ்சுப் போச்சி இன்னொன்று-

ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்குக் கம்பீரமாய் வரணும் முன்னா அவள் தன் நியாயமான சொத்தோடு வரணும். இல்லன்னா தான் ஏமாளியோன்னு அவளுக்குத் தாழ்வு மனப்பான்மைதான் வரும். தமயந்திக்கு அந்த மாதிரி மன நோய் வர நான் அனுமதிக்கமாட்டேன். இது வெறும் பொருளாதாரப் பிரச்னை அல்ல; பெண்களின் இன்னோர் உரிமைப் பிரச்னை. இ. பி.கோ...”

எவர்சில்வர் மாமா இடைமறித்தார்:

“சொத்தைப் பிரிச்சிக் கொடுக்காட்டால் இன்னும் ஒரு வாரத்தில் தமயந்தி சார்பில் பையன் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவான். அவன் பல கேஸ்ல தோத்திருக்கான். ஆனால் இந்தக் கேஸ்ல நிச்சயம் ஜெயிச்சிடுவான்! ”“”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/193&oldid=1369084" இலிருந்து மீள்விக்கப்பட்டது