பக்கம்:இன்னொரு உரிமை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செத்தாலாவது வாழலாம் 191


அவர் பகிரங்கமாக அறிவித்தபோது, பஞ்சாயத்து மாமாவும் சம்பந்திக்குத் தானும் இளைக்காதவர் என்பதுபோல் மகளின் ஆடைகளை நெருப்பில் போட்டு அவரும் ‘கொள்ளி’ வைத்தார்.

எப்படியோ காலம் அந்தத் தம்பதியருக்கு ‘கொள்ளிக்’ கண்களைக் காட்டியது. பொதுவாக கிராம சேவக்குகள் ஆசிரியைகளை மணந்துகொண்டு ‘டபுள்’ சம்பளத்தில் உருவங்களும் ‘டபுளாக’ இப்போது கமிஷனர்களாக மாறியபோது, கேமிஷன் வாங்காத ராமலிங்கம் கண்ணேறுபடும் அளவுக்கு அப்படியே இருந்தார். சமீபத்தில்தான் நோய்ப்பட்ட தந்தையைக் கிராமத்தில் போய்ப் பார்த்து கட்டிப் பிடித்து அழுதுவிட்டு, பிறகு அவரைப் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

ஒரு மாத விடுமுறையும் ராமலிங்கத்துக்கு ஓய்வு கொடுக்காமலேயே ஒய்ந்தது குடும்ப நிலையை எத்தனையோ பேரிடம் எடுத்துக் கூறினார். அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கும் ‘அட்மிஷன்’ ரசீதையும் மனைவிக்கு ‘மேஜர் ஆபரேஷன்’ தேவைப்படும் என்று ஒரு டாக்டர் கொடுத்த நிஜமான சர்டிபிகேட்டையும் இணைத்து மீண்டும் கருனை மனுப் போட்டார்.

அவருடைய கருணை மனுவுக்குப் பலன் கிடைக்கவில்லை யானாலும் பதில் கிடைத்தது.

கமிஷனர் அவரைப் பார்க்க அவர் வீட்டுக்கே வந்தார். உடன்பிறந்த சகோதரன் போல் ராமலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டே, “ஐ ஆம் ஸாரி தம்பி. நீங்க உடனே வேலையில் சேராவிட்டால் உங்க மேலே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கு நானும் உங்களுக்கு உடந்தைன்னு சொல்லி எனக்கும் மெமோ வந்திருக்கு நாளைக்கு வந்து ரிலிவிங் ஆர்டரை வாங்கிக்கிறீங்களா?” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/200&oldid=1369592" இலிருந்து மீள்விக்கப்பட்டது