பக்கம்:இன்னொரு உரிமை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறவுக்கு அபபால் 225

‘காமாட்சி... பொண்ணு வயசுக்கு வந்துவிட்டாள், ஆயிரம் ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்கியும் மிச்சம் பண்ணாட்டா எப்படி’ன்னா கேக்கறே? கவலைப்படாதே... இந்தக் காலத்துல பணம் சம்பாதிக்கனுமுன்னு நினைச்சா... எப்படி வேணுமுன்னாலும் சம்பாதிக்கலாம். என் ஆபீஸ்லெயே கை நீளுறதுக்கு பைல்ஸ் நீளமாயும் இருக்கு, அகலமாயும் இருக்கு. ஆனால் அது ஒரு பிழைப்பா? எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்கிறது முக்கியமில்ல... எப்படிச் சம்பாதிக்கிறோம் என்கிறதுதான் முக்யம்... டோன்ட் ஒர்ரி மை கேர்ல்...” என்று கணவன் முன்பொரு முறை சொன்னது ஞாபகம் தந்தது.

வெளியே கார் சத்தம் கேட்டது. இரண்டு மூன்று நிமிடங்களுக்குள், தியாகராஜன் தம்பி சதாசிவமும், தங்கை மீனாட்சியும் வந்தார்கள். அவர்களது சிரிப்போசை, கார்க் கதவை மூடும்போது கேட்டது. இப்போது, வீட்டிற்குள் நிலவிய ‘மூடை’ப் பார்த்ததும், அது அவர்களுக்கும் தொற்றிக்கொள்ள அசையாமல் நின்றார்கள்.

சகோதரி மீனாட்சியினால் அண்ணனின் படத்தைப் பார்த்ததும் தாள முடியவில்லை. ‘அண்ணா ஒவ்வொரு தீபாவளிக்கும் டில்லியிலிருந்து காஷ்மீர் சில்க் புடவை வாங்கி அனுப்புவியே... இனிமே யாருண்ணா எனக்கு அனுப்புவாங்க?’ என்று சத்தம் போட்டே அழுதாள். இந்த அழுகையைவிட அதன் அர்த்தத்தில் அதிர்ந்துபோன சதாசிவம், “அண்ணா! என்கிட்டே ‘டேய்... ஒன் பையனுக்கு தமிழ்நாட்ல என்ஜீனியரிங் காலேஜ்ல இடம் கிடைக்காது. உன் பையனை நல்லா படிக்கச் சொல்லு டில்லியில் என் வீட்லயே தங்கி, அவன் படிக்கட்டுமுன்னு’ சொல்லுவீங்களே...இனிமே யாரண்ணா...அப்படிச் சொல்லுவாங்க?” என்று அக்காளின் சத்தத்திற்கு அதிகமான சத்தத்தில் புலம்பினார்.

சி-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/234&oldid=1369458" இலிருந்து மீள்விக்கப்பட்டது