பக்கம்:இன்னொரு உரிமை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234  சு. சமுத்திரம்


"குதர்க்கம் வேண்டாம். நான் வாக்குக் கொடுத்துட்டேன். நீ அவனைக் கட்ட முடியுமா முடியாதா?"

"எங்க குடும்பம் நொடிச்சிப் போனது உண்மைதான். ஆனால் நீங்க மாப்பிள்ளை பார்த்து, நான் கட்டிக்கிற அளவுக்கு மானம் நொடிச்சி போகலே ஸார்..."

"பின் விளைவுகள் தெரியாம பேசாதே! இது உங்க அப்பா காலமுல்ல."

வித்யா இப்போது அவனை நேருக்கு நேராகப் பார்த் தாள். அவனைப் பார்க்கப் பார்க்க தன்மானம் அழுகையை அடக்கியது. இயலாமையை எதிர்ப்பு விலக்கியது. அச்சத்தை அஞ்சாமை விரட்டியது. மீண்டும் டில்லிப் பெண்ணானாள்.

"பின்விளைவுகள் தெரியாம பேசல. முன்விளைவு தெரியா தவரால ஏற்படுற பின்விளைவு தெரிந்து தான் பேசறேன்! நீங்க எல்லோரும் வட்டமேஜை மாநாடு போட்டு எங்களுக்குக் கொடுக்கப்போற உதவித்தொகையை நிறுத்தப்போறீங்க... அவ்வளவு தானே? பரவாயில்லை.

"உறவுக்கு மனிதாபிமானமோ, மனிதாபிமானத்துக்கு உறவோ தேவையில்லை. டில்லியில் என் அப்பாவின் நண்பர் ஒரு சர்தார்ஜி. நாங்கள் போகக் கூடாதுன்னு கண்ணீர்விட்டு அழுதார். இதை எதுக்காகச் சொல்றேன்னா... மனிதாபிமானம், மதம், மொழி, மத்தப் பிணைப்புக்களைத் தாண்டியது. உறவின் பரிபாஷைகள் பொருளாதார அந்தஸ்தைப் பொறுத்தது. ஆனால் மனிதாபிமானம் பொருளாதார வேலிக்குள் அடங்காத கருணை வெள்ளம். என் அப்பாவுக்கு அப்படிப்பட்ட சில மனிதாபிமான நண்பர்கள் இருக்காங்க ஸார்! என் அப்பா இறந்ததுனால... மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஒரு வேலை கொடுக்க அப்பவே அரசாங்கம் முன் வந்தது. நான் தான் உங்களைப் பார்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/243&oldid=1368854" இலிருந்து மீள்விக்கப்பட்டது