பக்கம்:இன்னொரு உரிமை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாமனுக்கு ஆகாது



பிறப்பிற்கும் இறப்பிற்கும் அங்கே பெரும் போர் நடந்துகொண்டிருந்தது. ‘இவள் வயிற்றில் இருந்து வரும் குழந்தை எனக்கே சொந்தம்’ என்று பிறப்பும், ‘நீ இப்படிப் பிடிவாதம் செயதால் குழந்தை மட்டுமல்ல, அதன் தாயும் எனக்கே’ என்று இறப்பும், கெடுபிடிப் போரில் ஈடுபட்டது போன்ற ஒரு நிலைமை அங்கே உருவாகியிருந்தது. பாக்கியம் வலிதாளாமல் பல்லைக் கடித்துக்கொண்டிருந்தாள். ஆடைகளை அகற்றியதால் முதலில் ஏற்பட்ட இயல்பான நாணம், இப்போது வேதனை முனங்கலில் மறைந்து போய்விட்டது. நான் சாவோடு பேமாட்டேன் என்னைப் போகவிடாதிக... என்று சொல்பவள்போல், ‘குடிமகளின்’ கையைப் பற்றுக்கோடுபோல் பற்றிக்கொண்டாள்.

பாக்கியத்துடன் சேர்ந்து அவள் அம்மாவும் அழுதாள்.

“ஏல... முத்தையா... வண்டிய பூட்டுடா, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனாத்தான் முடியும். ஜல்திடா. என்றார் பக்கத்துவிட்டுத் தாத்தா.”

முத்தையா கையைப் பிசைய, அந்தப் பிசைவின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட தாத்தா, “நான் பணம் தாரேண்டா வண்டியைப் பூட்டு” என்று சொல்ல முத்தையா இரண்டடி நடக்கையில், ‘குடிமகள்’ உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/39&oldid=1388147" இலிருந்து மீள்விக்கப்பட்டது