பக்கம்:இன்னொரு உரிமை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 சு. சமுத்திரம்


'இன்னைக்கு மாவு ஆட்டாண்டாம்.

'ஏன்னா?'

'நம்மலிலெ... நாம்லமாதுரி இருக்கவங்களுக்கு ஆசவந்து இருக்கிற காசு போயிடப்படாது. நாளையில இருந்து மசால் வட மட்டும் போட்டா போதும்.'

சிறுவன் நெற்றியில் கோடுகள் விழும்படி, புருவங்களை சுழித்துக்கொண்டிருந்தபோது, ஒரு போலீஸ்காரர் வந்தார். யூனிபாரத்தில் இரண்டு கோடுகளும், ஒரு நட்சத்திரமும் இருப்பதுபோல் தோன்றின.

'என்னடா... தோச ரெடியா!'

சிதம்பரம் பதிலளிக்காமல் இலையைப் போட்டான். போலீஸ்காரர் இலையைத் தின்னப்போகிறவர்போல், அதைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தார்.

'இல ஓட்டையா இருக்கு. வேற இல போடு!'

வேறு இலையில் வேறு வேறு தோசைகள் போடப் பட்டன. கொஞ்சம் சட்னி ஊத்துடா. ஏண்டா சட்னில காரம் இல்ல. தண்ணி கொடுடா. நல்ல தண்ணியா கொடுடா. வேற கிளாஸ்ல கொடு. இதுல ஒரே அழுக்கு.

போலீஸ்காரர் சாப்பிட்டுவிட்டுக் கையைக் கழுவிவிட்டு, 'கப் டீயா போடு' என்று சொல்லி வீட்டுத்தான் வாயைத் துடைத்தார். சிதம்பரம் இந்தத் தடவை கேட்டுவிடுவது என்று தீர்மானித்தான். எத்தனை நாளைக்கு இப்படி ஓசியில் தோசை போடுவது, பசிக்கிற மனுஷனுக்கு தோசை போட முடியல. தோசைக்காவே பசியை வரவழைக்கிற மனுஷன்கிட்ட கேட்கிறதுல என்ன தப்பு. அதோடு ஒரு மாசம் தினமும் இப்டி வந்து சாப்பிட்டா, இதே அளவு விறகு வெட்டப்போறவரு ஒருவர் சாப்பிட்டிருந்தா ஒரு ரூபாய் நாற்பது நயாபைசா கல்லாவுல விழுந்திடுமே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/63&oldid=1388599" இலிருந்து மீள்விக்கப்பட்டது