பக்கம்:இன்னொரு உரிமை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெங்களுர் தெரஸா 67

 என்று தலையை அங்குமிங்குமாய் ஆட்டியபடி உழன்ற வளை காலோடு தலையாய் வாரியெடுத்து, பிளாட்டாரச் சுவர்ப் பக்கம் கொண்டுபோய் சுவரில் சாத்தினான்.

அவளை உற்றுப் பார்த்தான். ஐம்பது வயதிருக்கலாம். வெள்ளைப் பார்டர் போட்ட கறுப்புச் சேலை. நிர்மலமான கண்கள். பெங்களுர் நகருக்கே உரிய மிளகாய்ப் பூ போன்ற மூக்கு. 'நான் யாருக்கும் எதுவும் செய்யலியே’ என்பதுமாதிரி எல்லோரையும் பார்த்தாள். பிறகு, 'எம்மோ... எம்மோ...' என்று வலது கால் வாதையை இடது காலைச் சுண்டியிழுத்து கட்டுப்படுத்த முயற்சித்தாள். இந்த முயற்சியோடு முயற்சியாய் 'என் பிள்ளிங்க...என் பிள்ளிங்க’ என்ற வார்த்தைகள் உச்சரிப்புப் பெற்றன.

லிங்கையா வாதைப்பட்ட அவள் வலது காலை லேசாய்ப் பிடித்தான். அவள் வீறிட்டுக் கத்தியபடியே மீண்டும், 'என்... பிள்ளிங்க... என் பிள்ளிங்க' என்றாள். லிங்கையாவுக்கு அவளைப் பார்க்க பார்க்க இளமையில் காலமான தன் தாயைத் தரிசித்ததுபோல் தோன்றியது. வாய் தடுமாற, நெஞ்சம் நெகிழ அழாத குறையாய்ப் பேசினான்.

"கவலைப்படாதீங்கம்மா. உங்களுக்குப் பெரிசாய் எதுவும் ஆகலம்மா..."

"என் பிள்ளிங்க... என் பிள்ளிங்க..."

"நானும் உங்களுக்கு ஒரு பிள்ளை மாதிரிதாம்மா. என் உயிரை விற்றாவது உங்களைக் காப்பாத்துவேம்மா! "

அவள் லிங்கையாவை உற்றுப் பார்க்கிறாள். அத்தனை வாதனையிலும், அவள் உதட்டில் லேசான புன்னகை.

விங்கையா அவளைத் துாக்கிக் காரின் பின்னிருக்கையில் இடத்தினான். கார்க் கதவை மூடிவிட்டு, இருக்கையில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்யப்போன போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/76&oldid=1368840" இலிருந்து மீள்விக்கப்பட்டது