பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2
இன்பம்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.


இன்பம் எது?

துன்பம் அற்ற உள்ளத்தின் நிலையே இன்பம். அது சிற்றின்பம் பேரின்பம் என இரண்டு வகைப்படும். சிற்றின்பம் என்பது சிறிது மட்டான இன்பம், பேரின்பம் பெரிது-மட்டற்ற இன்பம்.

இதுவன்றி, சிற்றின்பம் என்பது ஒருவன், ஒருத்தி சேர்க்கையின் நுகர்வது என்றும், மக்கள் நிலைக்கு அப்பாலான வீடுபேறு, பேரின்பம் என்றும்