பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

விள்ளுவது உண்மையானது அன்று; அது சமயக் கொள்கை நோக்கி மக்களை இழுத்துச் செல்வதோர் முயற்சி என்க,

துன்பம் இல்லாவிடத்து இன்பமே! துன்ப மில்லாத நிலைமை ஒன்றும் அந்நிலைமைக்குப்பின் தேடப்படும் இன்பம் மற்றொன்றும் இருப்பதாகக் கருதவேண்டா.

துன்பம் என்பதென்ன?

துன்பம் என்பது ஊறு, உறுவல், உறுகண் என்ற பெயர்களால் குறிக்கப்படும் நெருங்குவது என்பதுதான் அவற்றின் பொருள்.

துன்பம் என்பதன் வேர்ச்சொல் துன். அதன் தொழிற்பெயர் துன்னல்! துன்னல்-நெருங்குதல். துன் என்பதன் பண்புப் பெயர் துன்மை! துன்மை, துன்பம். நெருங்குவது என்ற காரணம் பற்றித் துன்பம் எனப்பட்டது.

மலையின் அடர்ந்த மூங்கில்கள் ஒன்றின் ஒன்று தேய்ந்து பற்றவே, அந்நெருப்பு நெருங்குவதைத் துன்பம் என்றனர் பண்டைத் தமிழர். மலையினின்று கிளம்பும் அந்தக் கனவைத் தாவம் என்றனர். தாவம் தாவும் எரி! மற்றும் தீயை அக்கால மக்கள் தீங்கு என்றே சொல்லி வந்தனர். தீ-எரி, தீங்கு! மற்றும் மேற்பாங்கிற் பெய்த மழையும், மலையருவியும் பெருகிக் குறிப்பின்றி நெருங்குவதையும் துன்பம் என்றனர் பண்டைய