12
யும் நிரம்பாத் தூக்கத்தையும் குறிப்பதாயின் அத் தூங்கல் இன்பமுடையது எனல் பொருந்தாது. அச்சந்தரும் கனாக்காண்பதும், கண் தூங்கவும். கை சிரங்கு சொரியவும் உள்ள நிலை தூக்கமேயல்ல. ஆயின் ஒருவன் செத்த நிலை இன்பநிலை தானோ என்றும் இன்பநிலையாயின் அதனை அவன் சொல்லியதுண்டோ என்றும் கேட்டால், அக்கேட்பானை நோக்கி நானும், செத்தநிலை துன்ப நிலையா என்றும், துன்பநிலையாயின் அதனை அவன் சொன்னதுண்டோ என்றும் கேட்கின்றேன்.
சாவு இன்பமும் துன்பமும் அற்ற நிலை என்க.
“அப்படியானால் அது நல்லதுதானே!”
“ஆம் நல்ல நிலைதான்”
“விரும்பத்தக்கதுதானா?”
“உன் மகனுக்குக் கல்வி தரவேண்டும். அப்பையன் இறகு முளைத்த பறவையாதல் வேண்டும். அவனுக்குத் திருமணம் முடிவதை நீ கண்டு இன்புறுதல் வேண்டும். தமிழுக்குத் தொண்டு செய்தல் வேண்டும். தமிழர் உயர்நிலையை நீ கண்டு இன்புறுதல் வேண்டும். புகழ்பெறுதல் வேண்டும். இவைபோன்ற பற்றுக்களை நீ விட்ட போது சாக்காடு விரும்பத்தக்கதுதான்.”