பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22

வருகின்றனர். இந்நிலையில் நம் நாட்டு மக்களின் மனவலிமையைக் கருதவும் இயலுமோ?

இன்பம் துய்ப்பதற்குரிய தகுதியான அகவலிமை அறிவொடு பொருந்தியதாக இருத்தல் வேண்டும். உலகில் அறியாமையொடு பொருந்திய மனவலிமையையும் காணுகின்றோம். இதைத்தான் பேதமை யென்று கூறுவர். அறிவொடு பொருந்திய மன வலிமையொரு எழுச்சியையும், அறியாமையொடுபட்ட மனவலிமை சோர்வையும் இடையிடையே தோற்றுவிப்பதே இவற்றிற்கு வேறுபாடு.

எந்தத் தொழிலும் இன்பத்தைத்தர வல்லதாயினும் செய்யும் தொழில்கள் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பெரும் பகுதியும் மற்றையோருக்குச் சிறு பகுதியுமாகப் பயன் விளைவிக்காமல் தனக்கும் மற்றையோருக்கும் ஒத்த அளவு பயன் விளைவிக்கும் நல்ல குறிக்கோளை ஒருவன் கொள்ளல் வேண்டும். இத்தகைய குறிக்கோளையுடைய நிகழ்த்தும் தொழிலாலுண்டாகும் கிளர்ச்சி யைத்தான் பேரின்பம் எனலாம். (இன்பம் என்று கூறப்படுவது உண்மையில் இன்பமாக இருப்பின் அவ்வின்பத்தில் உண்மையில் சிறுமை பெருமைக்கு இடமின்று, இங்கு சிற்றின்பம். பேரின்பம் என்று கூறியது இன்பத்தைத் தரும் வழிகளின் சிறுமை பெருமைகளை நோக்கியேயாகும்.)