கூ
ஏழைகள் உழைப்பால் பெரும் பொருள் சேர்த்து அதனால் வாழ்பவன் கடவுள் அடியவ னாகான். அவன் எத்துணை ஆலயங்கள் கட்டி னாலும், எத்துணை முறை க்ஷேத்திரயாத்திரை செய்தாலும், எத்தனை தீர்த்தங்கள் படிந்தாலும், எத்தனை மணியுருட்டினாலும், நாடோறும் வேத பாராயணஞ் செய்தாலும் அவன் உள்ளத்தில் இறைவன் கோயில் கொள்ளமாட்டான்.
நாடோ
றும் நெற்றி நீர் நிலத்தில் விழ வேலை செய்து, பெறும் ஊதியத்தை மனைவிமக்களோடு உண்டு, ஒரு காசும் சேர்த்து வையாமல் மீண்டும் அடுத்த நாள் வேலைக்குச் செல்லும் ஒருவன் உள்ளத்திலன்றோ ஆண்டவன் கோயில் கொள்வான்? அவன் தனக் கென்று பொருள் சேர்க்கவில்லை. தான் கஷ்டப் பட்டுப்பெற்ற கூலியை மனைவிமக்களென்னுஞ் சில உயிர்களுக்கு உதவுகிறான். அதற்கு மேல் அவன் பெற்றால் மற்றவர்க்கு உதவுவான். அவன் ஊழி யர்களைத் தேடுகின்றானில்லை; களியாடல்களுக் குச் செல்கின்றானில்லை. இயற்கை அவனுக்கு ஊழியஞ் செய்கிறது. இயற்கை வழி அவன் வாழ்வு நலமுறுகிறது. அவனைப் பேராசை அகங் காரம் உண்பதில்லை. பேராசை அகங்காரம் அவ னைக்கண்டு வணங்கி ஓட்டம் பிடிக்கின்றன. அவ னல்லவா அரசன்? அவனல்லவா ஆண்டவன்?