அ
தனக்கு உதவி செய்யும் தன்னைப்போன்ற மனி தர்கள் பட்டினிகிடக்க, கால் வயிறு அரை வயிறு உண்டு வருந்த, உடையின்றிக் குளிரால் மெலிய, அன்னார் உதவியால் தான் பெறும் பொருளை வேறு துறைகளில் செலவழிப்பது இயற் கைக்கு மாறுபட்டு நடப்பதாகும். இயற்கைக்கு மாறுப்பட்ட வாழ்வை நடாத்தும் ஒருவன் கல்வி கல்விபாமோ? அவன் செல்வம் செல்வமாமோ?
பிறர்க்கு எவ்வழியிலுந் துன்பந்தாராது, தான் பிறர்க்கு உழைக்க முயல்பவன் வாழ்வே இயற்கை வாழ்வாகும். அண்டைவீட்டில் ஏழைகள் பட் டினி கிடப்பதைக் கவனியாது, ஒருவன் தான் அறுசுவையோடு கூடிய உணவை உண்பதும், பக் கத்து வீட்டுப் பெண்மக்கள் ஆடையின்றி வருந்துவதைக் கண்ணோக்காமல் ஒருத்தி தான் விலையுயர்ந்த பட்டாடைகளையும் மாணிக்கக் கற் கள் பதித்த நகைகளையும் தரிப்பதும், ஏழைகள் ஆண்டவன் அளித்த இரண்டு கால்களால் நடந்து செல்ல, ஒருவன் அவர்கள் கண்களில் தூசுநிரம்ப மோடார் வண்டியில் ஊர்ந்து செல்வதும் இயற்கை
ழ்வாகுமோ? ஏழைகள் உழைப்பால் பெறும் பொருளைத் தன்னலத்துக்குப் பயன்படுத்துவது இயற்கை அறமாகாது. அவன் வாழ்வு இயற்கை வாழ்வாகாது. அவன் உள்ளத்தில் அன்புமலராது; அருட்டேன் பிலிற்றாது.