உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பவாழ்வு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வரைத்

எ.

துன்புறுத்துகிறது.

ன்

இவ்வித்தையும் செல்வமும் இன்ப வாழ்வை நல்குவனவாகா. மனிதன் இயற்கையைப் படிக்க வேண்டும். அப்படிப்பால் தன் உடலை, பொருளை, ஆவியை மற்றவர்க்கு அர்ப்பணஞ் செய்தல் வேண்டும். சர்வ கலாசாலைப்பட்டம் பெற்று உயர்ந்த உத்தியோ கத்திலுள்ள ஒருவன் வாழ்வை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவன் கல்வியாளன்; பொருளுடையான். ஆனால் அவன் வாழ்வு பெறாத வன்; இன்பமில்லாதவன்; இறைவனோடு பேசாத வன். அவ்வுத்தியோகஸ்தன் படுக்கையினின்று விழித்தெழுந்தது முதல் மீண்டும் உறக்கத்துக்குச் செல்லும் வரை அவன் பிறர் உதவியையே விரும்புகிறான். அவன் படுக்கையைச் சுருட்டு கிறவன் எவன்? அவன் உடம்பைக் கழுவு கிறவன் எவன்? அவனுக்கு உணவு அளிக் கிறவன் எவன்? அவன் வஸ்திரத்தைத் தோய்க் கிறவன் எவன்? எத்துணை பேர் உதவியை அவன் எதிர் பார்க்கிறான்! மற்றவர்க்காக வாழ வந்த இவன் மற்றவர் உழைப்பை ஏற்று வாழ்வது இயற்கையோடு மாறுபட்டு வாழ்வதன்றோ?

இத்துணை பேர் உழைப்பைப்பெறும் இவன் தான் ஈட்டும் செல்வப் பொருளைத் தன்னு டைக்கும் தன் உணவுக்கும் வேறு பல களிக் கூத்துக்கும் செலவழிக்கிறான். ச்செல்வன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/8&oldid=1710620" இலிருந்து மீள்விக்கப்பட்டது