கூ
.
வழங்கப்பட்டது? இன்பத்தை நுகரும் பொருட் டன்றோ? அவ்வின்பம், வாழ்வின் வழியன்றோ நுகர்தல்வேண்டும்? அவ்வின்பமே இறையின்ப மெனப்படும். இறையின்பம் என்பது மேலான இன்பம். அதைப் பேரின்பம் என்றுங் கூறுப. இன்பங்களுள் தலையாயது - அரசு போன்றது தனக்கு ஒப்பாகவும் உயர்வாகவும் பிறிதோர் இன்ப மில்லாதது - இறையின்பம். அவ்வின்பமே இன் பம்; அவ்வின்ப வாழ்வே வாழ்வு.
-
மனிதன், வாழ்வை ஒழுங்கான முறையில் நடத்தாமையால் துன்பத்துக்காளாகிறான்.சிக்க லான வழியில் வாழ்வை நடத்தும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நாடும் துன்பத்தையே அனுபவிக்கும். ஒழுங்கு பட்ட வாழ்வு ஏட்டுக் கல்வியால் -செல்வத்தால் வருவதன்று. மனிதன் படிக்க வேண்டிய படிப் பைப் படித்தால், சேர்க்க வேண்டிய செல்வத்தைச் சேர்த்தால் அவன் ஒழுங்குபட்ட வாழ்வைப் பெறுவான். தற்காலம் சர்வ கலாசாலைப் படிப் பும், வலிமையால் ஈட்டுஞ் செல்வமும் மக்கள் வாழ்வைச் சீர்படுத்துமோ? இப்பொழுது போதிக்கப்படும் வித்தை ஒரு தேசத்தை நேசிக்க மற்றத் தேசங்களை அழிக்கச் சேனைகளில் சேர வும் கப்பல்கள் கட்டவும் கொலைக்கருவிகள் செய் யவும் பெரிதும் பயன்படுகிறது. செல்வம் எளிய