இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ன்பவாழ்வு.
இன்பவாழ்வு எது? பலர்
பலவாறு கூறும்.
கால்வருள் ஒருவரும், இரு மனைவிமாரோடு வாழ்ந்து இல்லற நடாத்தி, அதன் வாயிலாக இன்ப அன்பைக் கண்டு, ஆண்டவனோடு தோழமை பூண்டவருமாகிய வன்றொண்டப் பெருந்தகையார் திருவாக்குகளுள் ஒன்று நினை விற்கு வருகிறது. அதைப் பீடிகையாகக்கொண்டு. இக்கட்டுரை வரைவான் புகுகிறேன்.
தம்பிரான் தோழர் திருவாக்கு வருமாறு:-
66
இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு"
இத்திருவாக்கு பாட்டா? மலரா? திங்களா? டால்ஸ்டாயா?
அமிழ்தமா?
காந்தியா என் னென்று கொள்வது? 'இறைகளோடிசைந்த இன் பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு' என்றே கொள் ளல்வேண்டும்.இறையே! இன்பமே! வாழ்வே! நீங்கள் வேறோ? உங்களுக்குள்ள தொடர்பை என் னென்று சொல்வது? அத்தொடர்பை உணர்வ தன்றோ அறிவு? இவ்வுலக வாழ்வு எற்றுக்கு